அமீரக செய்திகள்
அமீரகத்தில் கொரனோவைரஸின் தற்போதைய நிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAM) உறுதிப்படுத்தியுள்ளது. இது அமீரகத்தில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் ஈரான் நாட்டை சேர்ந்த கணவன்(வயது 70 ) மற்றும் மனைவி (வயது 64 ) என்பது தெரிய வந்துள்ளது. இதில் கணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் (ICU) வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்ட சீனா நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் கண்டறியப்பட்டது நினைவுகூறத்தக்கது.