அமீரக செய்திகள்

அபுதாபி பிக் டிக்கெட்டில் அடுத்தடுத்து வென்ற இந்தியர்கள்!! ஒரே வாரத்தில் நான்கு இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்…

அபுதாபி பிக் டிக்கெட் செய்த ப்ரோமோஷனின் படி, செப்டம்பர் மாதத்தில் ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தானாகவே வாராந்திர இ-டிராவில் நுழைவார்கள். அதில் வெற்றி பெறும் நான்கு பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு வாரமும் 100,000 திர்ஹம் ரொக்கப் பரிசை பெறுவார்கள்.

அந்த வகையில், இந்த வாரத்திற்கான இ-டிராவில் இரண்டு ஓட்டுநர்கள், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என அடுத்தடுத்து இந்தியர்கள் ரொக்கப் பரிசை வெல்லும் அதிர்ஷ்டசாலிகளாகியுள்ளனர். அவ்வாறு வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

வாரம் 1க்கான வாராந்திர இ-டிராவின் முதல் வெற்றியாளர் – தடவர்த்தி ஆஞ்சநேயுலு

61 வயதான ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான இவர், சமீபத்தில்தான் பிக் டிக்கெட்டை வாங்கத் தொடங்கியதாகவும், இந்த முறை அவர் வாங்கிய 11 எண் கொண்ட டிக்கெட்டுக்கு ரொக்கப் பரிசு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வெற்றியாளர்- பிரமோத் சசிதரன் நாயர்

சவூதி அரேபியாவில் வசிக்கும் சசிதரன், கடந்த நான்கு ஆண்டுகளாக தனது நான்கு சக ஊழியர்களுடன் ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகளை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரமோத் தற்பொழுது எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் வாங்கிய டிக்கெட் எண் 5 அவருக்கு அதிர்ஷ்டத்தை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ரொக்கப் பரிசை வைத்து இந்தியாவில் உள்ள அவரது மனைவிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது வெற்றியாளர்-நரேஷ் குமார்

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், கடந்த பத்து ஆண்டுகளாக மஸ்கட்டில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சக ஊழியர்களுடன் குழுவாக சேர்ந்து பிக் டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வாராந்திர இ-டிராவில் வெற்றி பெற்றதாக அழைப்பு வந்தவுடன் உற்சாகமடைந்த நரேஷ், ரொக்கப் பரிசை அவரது குழுவுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும், அவரது பங்கை சேமித்து இந்தியாவில் வணிகம் செய்ய உள்ளதாகவும் பகிர்ந்துள்ளார்.

நான்காவது வெற்றியாளர்-நூர் முஹம்மது:

இந்தியாவைச் சேர்ந்த நூர் முஹம்மது, 1984 ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். 56 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு அவரது ஆறு சகாக்களுடன் சேர்ந்து பிக் டிக்கெட்டை வாங்கிய முஹம்மதுவிற்கு பிக் டிக்கெட் இ-டிரா மூலம், அதிர்ஷ்டக்கதவு திறந்துள்ளது. இந்தப் பணத்தை வைத்து கிரெடிட் கார்டு கடனை அடைத்துவிட்டு, மகள்கள் மற்றும் மனைவிக்கு தங்க நகைகள் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அபுதாபி பிக் டிக்கெட்டின் ப்ரோமோஷன் தேதிகளில் டிக்கெட்டுகளை வாங்கும் எவரும் அக்டோபர் 3, 2023 அன்று கிராண்ட் பரிசாக 15 மில்லியன் திர்ஹம்களை அள்ளிச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட்டை வாங்க விரும்புபவர்கள் செப்டம்பர் 30 வரை www.bigticket.ae என்ற இணையதளத்தில் ஆன்லைனிலோ அல்லது அபுதாபி மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலோ வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் டிக்கெட் வாராந்திர இ-டிராவில் பங்கேற்பது எப்படி?

  • வாரம் 2: செப்டம்பர் 11 முதல் 17 வரை வாங்கவும். டிரா தேதி செப்டம்பர் 18 (திங்கட்கிழமை)
  • வாரம் 3: செப்டம்பர் 18 முதல் 24 வரை வாங்கவும். டிரா தேதி செப்டம்பர் 25 (திங்கட்கிழமை)
  • வாரம் 4: செப்டம்பர் 25 முதல் 30 வரை வாங்கவும். டிரா தேதி அக்டோபர் 1 (ஞாயிற்றுக்கிழமை)

Related Articles

Back to top button
error: Content is protected !!