அமீரக செய்திகள்

அமீரகத்திலிருந்து வெறும் 39 திர்ஹம்ஸில் 4 நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கலாம்!! – Wizz Air Abu Dhabi-ன் சிறப்பு ப்ரொமோஷன்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல நினைத்தாலும் டிக்கெட் முன்பதிவு மற்றும் அதற்கான கட்டண செலவு பற்றி கடைசி நிமிடத்தில் கவலைப்படுகிறீர்களா? இனி செலவு குறித்த கவலை வேண்டாம், ஏனெனில், இப்போது சில பட்ஜெட் விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நம்பமுடியாத குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குகின்றன.

குறிப்பாக, Wizz Air Abu Dhabi நான்கு இடங்களுக்கு 39 திர்ஹம்ஸ் முதல் 69 திர்ஹம்ஸ் எனும் மிகக்குறைந்த கட்டணத்தில் விமானச் சேவையை வழங்குகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். இந்த மலிவான விமான டிக்கெட்டுகளை இம்மாதம் முதல் குறிப்பிட்ட நாட்களில் திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

இந்த சிறப்பு கட்டணத்தில் வெறும் 40 திர்ஹம்களுக்கும் குறைவான செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆயிரம் மைல்கள் பயணம் செய்து வித்தியாசமான காலச்சாரத்தையும், காட்சிகளையும் அனுபவிக்கலாம். மேலும் இது ஒரு வழிப் பயணத்திற்கு ஆகும் செலவாகும், ஆனால் நீங்கள் சரியான தேதியைத் தேர்வுசெய்தால், அதே செலவில் திரும்பி வரவும் முடியும்.

அதன்படி Wizz Air Abu Ahabi விமானத்தில் இந்த ஜூன் மாதம் வெறும் 39 திர்ஹம்ஸ் முதல் 69 திர்ஹம்ஸ் கட்டணத்தில் (ஒரு வழி) நீங்கள் செல்லக்கூடிய நான்கு இடங்கள் எவை என்பது பற்றிய முழுத் தகவல்களை கீழே தெரிந்து கொள்ளலாம்:

1. சலாலா, ஓமன்:

ஒமானில் அமைந்துள்ள இந்த சுற்றுலாதலம் அதன் பசுமையான காட்சிக்கு மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்கு ஜூன் மாதத்தில் பருவமழை காரணமாக, காலநிலை ஈரப்பதமாக இருக்கும். ஆனால், இப்போது வானிலை இன்னும் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளை விட குளிர்ச்சியாக உள்ளது.

ஜூன் 13 (செவ்வாய்கிழமை) அன்று, Wizz Air Abu Dhabi சலாலாவிற்கு 39 திர்ஹம் கட்டணத்தில் டிக்கெட்டை வழங்குகிறது, மேலும் நீங்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு திரும்பி வருகிறீர்கள் என்றால், அங்கிருந்து மீண்டும் UAE தலைநகருக்குச் செல்லும் விமானத்திற்கு அதே கட்டணத்தில் டிக்கெட்டைப் பெறலாம்.

2. மஸ்கட், ஓமன்

ஓமானி கலாச்சாரத்தையும் நாட்டின் பிரபலமான அடையாளங்களையும் அனுபவிக்க விரும்பினால், மஸ்கட் நீங்கள் பார்வையிடுவதற்கான சிறந்த இடமாகும். அங்குள்ள சில தனித்துவமான நினைவுச்சின்னங்களைக் காணக்கூடிய அதன் துடிப்பான சூக்குகளைக் காணத் தவறாதீர்கள். இந்த அனுபவத்தைத் தவறவிடாமல் அனுபவிக்க ஜூன் மாதத்தின் கடைசியில் வெறும் 69 திர்ஹம்ஸில் சுல்தானகத்தின் தலைநகருக்கு பயணிக்கலாம்.

3. தம்மாம், சவுதி அரேபியா:

மீன் பிடித்தல், டைவிங் போன்ற செயல்பாடுகளை விரும்புபவர்களாக இருந்தால், தம்மாம் உங்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுலா இடமாகும். இதுஅரேபிய வளைகுடாவில் பசுமையான பூங்காக்கள், காற்றோட்டமான நீர்முனைகள் மற்றும் மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் கலகலப்பான கலைகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜூன் 18, 19 ம் தேதிகளில் தம்மாம் பயணிக்கும் பயணிகள் வெறும் 39 திர்ஹம்களில் சவுதி நோக்கி பறக்கலாம். அதுவே ஜூன் 14 முதல் 49 திர்ஹம்ஸிற்கும், ஜூன் 11 முதல் 59 திர்ஹம்ஸிற்கும் சவூதிக்கு பயணிக்கலாம். அதேசமயம், அபுதாபிக்கு திரும்பும் விமானத்தின் விலை சற்று அதிகமாக இருக்கலாம் ஆனால் வழக்கமான கட்டணத்தை விட இன்னும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. குவைத் சிட்டி, குவைத்:

வளைகுடா நாட்டில் உள்ள சில சிறந்த சுற்றுலாத் தலங்களுக்குத் தாயகமாக விளங்கும் குவைத் சிட்டியில், சிறந்த பழம்பொருட்கள், தளபாடங்கள் மற்றும் தரைவிரிப்புகள் மற்றும் பாரம்பரிய அரபு ஆடைகளை நீங்கள் காணலாம். இது நாட்டின் பழமையான சந்தைகளில் ஒன்றான Souq Al Mubarakiya விற்கும் பெயர் பெற்றது. இங்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை அனுபவிக்கலாம்.

அபுதாபியில் இருந்து குவைத் பயணிப்பதற்கு ஜூன் 12 ம் தேதி 49 திர்ஹம்களில் டிக்கெட்டை பெறலாம். கூடவே, அதே விலையில் அமீரகம் திரும்புவதற்கான டிக்கெட்டையும் பெறலாம்.

இந்த டிக்கெட் விலை விவரங்கள் நாளுக்கு நாள் மாற்றம் காண வாய்ப்புள்ளதால், நீங்கள் முன்பதிவு செய்யும் போது விமான நிறுவனத்தின் இணையதளத்தைச் சர்பர்த்துக் கொள்வது நல்லது. மேலும், சில விருப்ப சேவைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!