அமீரக செய்திகள்

அமீரகத்தில் 7000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ள சுற்றுலாத்துறை! – நாட்டுப் பொருளாதாரத்தில் 180.6 பில்லியன் திர்ஹம்களை பங்களித்துள்ளதாகத் தகவல்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் பயண மற்றும் சுற்றுலாத்துறை இந்த ஆண்டு எமிரேட்டின் மொத்த பொருளாதாரத்தில் சுமார் 180.6 பில்லியன் திர்ஹம்களை பங்களித்துள்ளதாக இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இது, கடந்த 2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 183.4 பில்லியன் திர்ஹம்கள் பொருளாதாரத்திற்கு பங்களித்ததாகவும், இந்த ஆண்டு உச்சத்தை தொடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்குப் பின்னர், வெளிநாட்டினர் துபாய் மற்றும் அபுதாபி நோக்கி அதிகளவில் பயணிப்பதால் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார மீட்சி உந்தப்படுவதாக உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சிலின் (WTTC) சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்தப் பொருளாதாரத்தில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை கிட்டத்தட்ட 10 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், இந்தத் துறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7,000 வேலைகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரகத்தின் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையானது தொற்றுநோய்க்குப் பின் மீண்டு வந்த முதல் துறைகளில் ஒன்றாகும். 2022 ஆம் ஆண்டில் DXB-யில் “revenge travel”இன் விளைவாக பயணிகள் போக்குவரத்து 66 மில்லியனுக்கும் மேலாக இருமடங்காக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டின் உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் என்பதையும் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எமிரேட்ஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டின் முதல் காலாண்டில் DXB, பயணிகள் போக்குவரத்தில் 55.8 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டை விட 21.3 மில்லியனை எட்டியுள்ளது. இது குறித்து WTTC இன் தலைவர் மற்றும் CEO ஜூலியா சிம்ப்சன் அவர்கள் பேசுகையில், UAE சர்வதேச பயணிகளிடையே தொடர்ந்து பிரபலமடைந்து வருகின்ற நிலையில், தேசிய பயணம் மற்றும் சுற்றுலாத் துறை விரைவான வேகத்தில் மீண்டு வருவதாகவும், இந்தத் துறையின் எதிர்காலம் சாதகமாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், UAE பொருளாதாரத்தில் 10.2 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் துறையானது 2033 ஆம் ஆண்டுக்குள் அதன் GDP பங்களிப்பை 235.5 பில்லியன் திர்ஹம்களாக அதிகரிக்கும் என்று உலகளாவிய சுற்றுலா அமைப்பு கணித்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த தசாப்தத்தில் இந்தத் துறையானது நாடு முழுவதும் 872,000 க்கும் அதிகமானவர்களைப் பணியமர்த்தி, அனைத்து வேலைகளிலும் கிட்டத்தட்ட 12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள்:

2022 ஆம் ஆண்டில், மத்திய கிழக்கின் பயண மற்றும் சுற்றுலாத் துறையானது பிராந்தியப் பொருளாதாரத்திற்கு 1.2 டிரில்லியனுக்கும் அதிகமாக பங்களித்துள்ளது, இது 2019 இன் உச்சத்தை விட 25.3 சதவீதம் குறைவாகும். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் பிராந்தியத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு 1.5 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று WTTC கணித்துள்ளது.

WTTC இன் கூற்றுப்படி, தொற்றுநோய்களின் போது இழந்த வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் துறை மீட்டெடுக்கும். மேலும், அடுத்த தசாப்தத்தில், பயண மற்றும் சுற்றுலாத் துறையானது கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் திர்ஹம் பங்களிப்பை எட்டும் மற்றும் 9.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!