அமீரக செய்திகள்

ஷார்ஜாவிலிருந்து 60 நிமிடத்தில் கல்பா செல்லும் புதிய சாலையை திறந்து வைத்த ஷார்ஜா ஆட்சியாளர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான ஷார்ஜாவிலிருந்து கல்பா நகருக்கு 60 நிமிடத்தில் சென்றடையக்கூடிய புதிய சாலையை அமீரகத்தின் உச்சநீதிமன்ற உறுப்பினரும் ,ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள் நேற்று திறந்து வைத்துள்ளார். மேலும் ஷார்ஜா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறான வளர்ச்சி மற்றும் சுற்றுலா திட்டங்களையும் மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் அவர்கள் ஆய்வு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஷார்ஜாவிலிருந்து கல்பாவிற்கு செல்ல பயண நேரம் குறைந்தது 90 நிமிடங்களாக இருந்து வந்த நிலையில், ஷார்ஜா வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய சாலையின் மூலம் வெறும் 60 நிமிடங்களில் கல்பா நகரை சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 26 கி.மீ நீளமுள்ள இந்த புதிய சாலை ஷார்ஜாவிலிருக்கும் வாடி அல் ஹிலோவிலிருந்து கல்பாவில் உள்ள கொடி சதுக்கம் வரை போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாலையில் 450 மீட்டர் நீளமுள்ள மலைக்கு அடியில் செல்லும் சுரங்க பாதையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!