அமீரக செய்திகள்

துபாய்: வாட்ஸ்அப் மூலமாகவே இனி வாகன பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..??

துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கு வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தலாம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “971 58 8009090 என்ற எண்ணில் RTA இன் Chatbot Mahboub க்கு WhatsApp அனுப்பி எளிதாக பார்க்கிங் செய்து கொள்ளலாம். இதன்மூலம் வழக்கமான SMS கட்டணத்திற்கு செலவாகும் 30 ஃபில்களை (fils) சேமிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்துவது எப்படி..??

>> வாகன எண் (இடைவெளி) சோன் எண் (இடைவெளி) கால அளவு [plate number (space) zone number (space) duration] என்ற முறையில் வாட்ஸ்அப் செய்ய வேண்டும். உதாரணமாக A00000 000A 2 என இருக்க வேண்டும்.

>> பார்க்கிங் டிக்கெட் கட்டணம் வாகன ஓட்டிகளின் டிஜிட்டல் வேலட்டில் இருந்து கழிக்கப்படும்.

இந்த முறை அல்லாமல், வாகன ஓட்டிகள் பொது வாகன நிறுத்தத்திற்கு SMS மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

கடந்த மார்ச் 28 அன்று, வாகனங்களுக்கான இலவச பார்க்கிங்கை வெள்ளிக்கிழமைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றுவதாக RTA அறிவித்தது. அதாவது, கட்டண வாகன நிறுத்துமிடங்கள் முன்பு இருந்ததைப் போலவே வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த இலவசமாகும்.

இதன்படி ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை என 14 மணி நேரம் துபாயில் பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும்.

கூடுதலாக, போக்குவரத்து அபராதம் அல்லது ஓட்டுநர் மற்றும் வாகன உரிமத்திற்கான தேவைகள் குறித்து குடியிருப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று RTA முன்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!