அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ருக்கு 9 நாட்கள் விடுமுறையை அறிவித்த வளைகுடா நாடு.. நீண்ட விடுமுறையை கொண்டாடவிருக்கும் மக்கள்..!!

இந்த வருட ரமலான் மாதம் முடிய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாடானது ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

இதன்படி  ஈத் அல் பித்ர் விடுமுறைகள் மே 1 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி முடிவடையும் என்று குவைத்தின் சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து   அனைத்து அமைச்சகங்களும் மாநில அதிகாரிகளும் மே 8 ஆம் தேதி மீண்டும் பணியைத் தொடங்குவார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள வல்லுநர்கள் மற்றும் வானியல் மையங்கள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பை நிறைவு செய்யும் என்றும், அதன்படி, ஈத் அல் பித்ரின் முதல் நாள் மே 2 ஆம் தேதி என்றும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 29 மற்றும் 30 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இருந்து, அரசு ஊழியர்கள் நீண்ட 9 நாள் ஈத் விடுமுறையால் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!