அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் 1,000 திர்ஹம் அபராதம்!! – ICPன் அபராதங்கள் குறித்த விவரங்கள் இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிர்வாக அபராதங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் எமிரேட்ஸ் ஐடி தொடர்பான அபராதங்கள், ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர்களின் விவகாரங்கள் தொடர்பான சேவைகள் அடங்கும்.

ICP ஆல் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள அபராதங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. ஐடி கார்டு பதிவு மற்றும் தரவுகள் வழங்குவதில் தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளுக்கும் 20 திர்ஹம் என்னும் அடிப்படையில் அதிகபட்சம் 1,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

2. ஐடியின் காலாவதி தேதியில் இருந்து 30 நாட்களுக்குப் பிறகு புதுப்பிப்பதில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 20 திர்ஹம் முதல் அதிகபட்சமாக 1,000 திர்ஹம் வரை விதிக்கப்படும்.

3. எமிரேட்ஸ் ஐடிக்கான சேவையைப் பெறும் நபர் தவறான தரவுகளை வழங்கினால் – 3,000 திர்ஹம் அபராதம்.

4. கணினி பயனர்களால் எமிரேட்ஸ் ஐடி அப்ளிகேஷனை தவறாக டைப்பிங் செய்தவதற்கு- 100 திர்ஹம் அபராதம்

5. ஊழியர்களின் வேலையைத் தடுப்பது அல்லது அவர்களுடன் ஒத்துழைக்கத் தவறுவது போன்ற செயல்களுக்கு – 5,000 திர்ஹம் அபராதம்

எமிரேட்ஸ் ஐடி தொடர்பான அபராதங்களிலிருந்து விலக்கு பெற விண்ணப்பிக்க முடியுமா?

எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்களால் அதை புதுப்பிக்கவோ அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதை வழங்கவோ முடியவில்லை என்றாலும், பின்வரும் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்யக் கோரும் வசதியை ICP வழங்குகிறது:

1. அபராதத்திலிருந்து விலக்கு பெற விண்ணப்பதாரர் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வாழ்ந்திருக்க வேண்டும், அல்லது UAE-ஐ விட்டு வெளியேறிய பிறகு காலாவதியான அடையாள அட்டையை வைத்திருக்கும் குடியிருப்பாளர் இதை நிரூபிக்க அவர்கள் பயண ஆவணத்தை வழங்க வேண்டும்.

2. செல்லுபடியாகும் ஐடி கார்டு கொண்ட நபரை வெளிநாட்டில் ஒரு நிர்வாக அல்லது நீதித்துறை ஆணையின் விளைவாக தடுத்து வைக்கப்பட்டதால் காலாவதியானது அல்லது யாருடைய பாஸ்போர்ட் ஒரு வழக்கில் அல்லது புதுப்பித்தல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டு காலாவதியானது – அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்க வேண்டும்.

3. படுக்கையில் இருக்கும் நபர் அல்லது தொற்று நோய் அல்லது பகுதி அல்லது முழு இயலாமையால் அவதிப்படுபவர் – அவர்கள் மருத்துவ அதிகாரிகளால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டும்.

4. நாட்டில் உள்ள டிப்ளோமேட்டிக் அல்லது தூதரகப் பணிகளின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பில் உள்ளவர்கள்.

5. வாடிக்கையாளர் சேவை மையங்களுக்குச் செல்ல முடியாத 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் – அவர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும்.

6. ஆவணங்களின் பிழைகள் அல்லது எமிரேட்ஸ் ஐடியின் அமைப்புகள் அல்லது அதன் ஊழியர்களில் ஒருவரால் அல்லது டைப்பிங் அலுவலகம் காரணமாக ஒரு அடையாள அட்டையை பதிவு செய்வதில் அல்லது வழங்குவதில் ஏற்பட்ட தாமதம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!