அமீரக செய்திகள்

அரசியல் பயணமாக கத்தார் சென்ற அமீரக தலைவர்..!! விமான நிலையம் சென்று வரவேற்ற கத்தார் எமிர்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் கத்தார் நாட்டிற்கு அரசியல் பயணமாக நேற்று (திங்கள்கிழமை) கத்தார் சென்று வந்துள்ளார். 

பல மூத்த அதிகாரிகளுடன் தோஹாவில் தரையிறங்கிய அவரை, ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி வரவேற்றார். கத்தாரைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், காவலர்களும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் தேசிய கீதங்களை இசைக்கும் இசைக்குழுவினரும் அவரை வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமானது கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியின் அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த அரசு பயணம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் இடையே சுமூகமான உறவு எட்டிய பிறகு அமீரக தலைவர் கத்தார் செல்வது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, ஷேக் முகமது ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்கத்தில் ஷேக் தமிமை வாழ்த்து, வெற்றிகரமான போட்டியை நடத்துவதில் கத்தாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளிக்கும் என வலியுறுத்தியிருந்தார். கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவது, கத்தார் மற்றும் அரபு உலகிற்கு ஒரு பெரிய சாதனையைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!