அமீரக செய்திகள்

திருத்தம் செய்யப்பட்டுள்ள ரெசிடன்சி, விசிட் விசாக்களின் செல்லுபடி காலத்தை தெரிந்துகொள்வது எப்படி..!!

மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், GCC நாட்டவர்களின் விசாக்கள் மற்றும் எமிரேட் ஐடி, அதே போன்று மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசிட் மற்றும் சுற்றுலா விசாக்கள் ஆகியவற்றின் மீதான செல்லுபடியாகும் கால நீட்டிப்பில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரக அமைச்சரவை கூட்டத்தின் பின்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த புதிய திருத்தத்தின்படி, இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருந்த விசாக்களின் செல்லுபடியாகும் காலம் தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், அமீரகத்தில் இருக்கும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், GCC நாட்டவர்கள் தங்கள் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடியிருப்பாளர்களை போன்றே, மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான விசிட் மற்றும் சுற்றுலா விசாவினை கொண்டு தற்போது அமீரகத்தில் தங்கி இருப்பவர்களின் விசா நீட்டிப்பும் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரையிலும் அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் மார்ச் 1 க்கு பிறகு காலாவதியான அனைத்து விசாக்களுக்கும் டிசம்பர் 31, 2020 வரை செல்லும் என குறிப்பிடப்பட்டுவந்த நிலையில், தற்போது செல்லுபடியாகும் காலம் ரெசிடன்சி மற்றும் விசாக்களை பொறுத்து மாற்றம் செய்யயப்பட்டுள்ளது.

அதன்படி, காலாவதியான விசிட் விசாக்கள் மற்றும் காலாவதியான ரெசிடன்சி விசாக்களின் செல்லுபடியாகும் காலம் அவர்களின் விசா காலாவதியான மாதத்தினை பொருத்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்ட காலாவதியான விசாக்களின் தற்போதைய செல்லுபடியாகும் காலத்தை தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள்…
  1. ICA வின் beta.smartservices.ica.gov.ae என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். (லிங்க் இணைக்கப்பட்டுள்ளது)

2. File No அல்லது பாஸ்போர்ட் தகவல் (Passport information) இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். (File No என்பது ரெசிடென்சி மற்றும் விசிட் விசாக்களில் கொடுக்கப்பட்டிருக்கும்)

3. நீங்கள் காலாவதியான ரெசிடன்சி விசா வைத்திருந்தால் Residency என்பதையும், காலாவதியான விசிட் அல்லது டூரிஸ்ட் விசா வைத்திருந்தால் Visa என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

4. File Type என்பதில் கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் File No என்பதை தேர்வு செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸில் முறையாக உங்களின் File No-ஐ (Example: 101-2020-xx-xxxxx) குறிப்பிட வேண்டும். பின்பு உங்களின் நேசனாலிட்டி (Nationality) மற்றும் பிறந்த தேதியை (Date of birth) குறிப்பிட்டு search பொத்தானை அழுத்தினால் உங்கள் விசாவினுடைய திருத்தியமைக்கப்பட்ட செல்லுபடியாகும் காலத்தை தெரிந்துகொள்ளலாம்.

(குறிப்பு : File Type-ல் Emirate Unified Number எண் மற்றும் Identity Number எண் தெரிந்தவர்கள் அதனை குறிப்பிடுவதன் மூலமும் தங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!