அமீரக செய்திகள்

அரசு, தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான விடுமுறை.. அமீரக அரசின் அதிரடி அறிவிப்பு..!

அமீரகத்தில் திங்களன்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொது விதிகளின் கீழ் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரே வகையான விடுமுறைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஃபெடரல் ஆணை சட்டம் எண். 2021 ம் ஆண்டின் 47 ன் கீழ், நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு ஒரே உரிமைகளை வழங்கும் ஒருங்கிணைந்த, நிலையான மற்றும் போட்டித் தொழிலாளர் சந்தையை உருவாக்க பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன்படி பிப்ரவரி 2, 2022 முதல், நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் ஒரே மாதிரியான வருடாந்திர, மகப்பேறு, துக்கம் மற்றும் படிப்பு விடுமுறைகளைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவை:

வருடாந்திர விடுப்பு: முழுநேர பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 30 நாள் வருடாந்திர விடுப்புக்கு தகுதியுடையவர்கள். பணியாளர்கள் ஆறு மாத வேலையை முடித்தவுடன், ஆண்டு முடிவதற்குள் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற அவர்களுக்கு உரிமை உண்டு.

மகப்பேறு விடுப்பு: அரசு, தனியார் ஆகிய இரண்டு துறைகளிலும், மகப்பேறு விடுப்பு 60 நாட்களாக இருக்கும். இதில் 45 நாட்கள் முழு ஊதியமும், 15 நாட்கள் பாதி ஊதியமும் வழங்கப்படும். மீண்டும் வேலைக்குத் திரும்பியதும், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் பிறந்ததிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தாய்ப்பால் கொடுக்க உரிமை உண்டு. பெண் ஊழியர்கள் தங்கள் மகப்பேறு விடுப்பை மற்ற அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையுடன் இணைத்தும் கொள்ளலாம். மேலும் மகப்பேறு விடுப்பு எடுப்பதற்காக அவரை வேலையில் இருந்து நீக்க கூடாது.

மகப்பேறு விடுப்பு (ஆண்கள்): குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குள் தொடர்ந்து அல்லது  விட்டு விட்டோ ஐந்து நாள் விடுப்பை குழந்தையின் தந்தை எடுத்துக்கொள்ளலாம்.

துக்க விடுப்பு: வாழ்க்கைத் துணைவர் இறந்தால் 5 நாட்கள் விடுமுறையும், நெருங்கிய குடும்ப உறுப்பினர் இறந்தால் 3 நாட்கள் விடுமுறையும் எடுத்துக் கொள்ள ஊழியர்களுக்கு உரிமை உண்டு.

நோய் விடுப்பு: நோய்வாய்ப்பட்டால் ஊழியர்களுக்கு வருடத்திற்கு குறைந்தது 90 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இதில் 15 நாட்கள் முழு ஊதியமும், 30 நாட்கள் பாதி ஊதியமும் வழங்கப்படும் மற்றும் மீதமுள்ள காலம் ஊதியம் செலுத்தப்படாமாட்டாது.

படிப்பு விடுப்பு: அமீரகத்தில்-அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது நாட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியில் உள்ள பல்கலைக்கழகத்திலோ சேர்ந்துள்ள பணியாளர்கள் தேர்வுக்காக ஆண்டுக்கு 10 நாட்கள் விடுமுறை பெற தகுதியுடையவர்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்து விடுப்புகளும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!