அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ள மற்றொரு எமிரேட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல் குவைன் காவல்துறையானது தனது எமிரேட்டில் வழங்கப்பட்ட போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியானது டிசம்பர் 1, 2022 முதல் ஜனவரி 6, 2023 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடுமையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

தள்ளுபடி பொருந்தாத விதிமீறல்கள்:

பொது அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல்

ரெட் சிக்னலில் நிற்காமல் ஓட்டுதல்

குறிப்பிட்டுள்ள வேக வரம்பை விட மணிக்கு 80 கி.மீ.க்கு மேல் வாகனங்களை ஓட்டுதல்

அனுமதியின்றி வாகனத்தின் இயந்திரம் அல்லது சேஸை (chassis) மாற்றுதல்

மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுதல்

அமீரக தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பொது மக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க காவல்துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமீரகத்தில் போக்குவரத்து அபராதங்களில் தள்ளுபடியை அறிவித்த இரண்டாவது எமிரேட் உம் அல் குவைன் ஆகும்.

முன்னதாக, நவம்பர் 21, 2022 முதல் ஜனவரி 6, 2023 வரை போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடியை அஜ்மான் காவல்துறை அறிவித்திருந்தது. நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் செய்யப்படும் அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்று அஜ்மான் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுவைமி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!