அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஐடி, விசாக்கு விண்ணப்பிக்க இனி நெனச்ச போட்டோவை கொடுக்க முடியாது.. ICP வெளியிட்ட தேவைகள் என்ன..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் பயன்பாட்டில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஐடிக்கு பதிலாக பல மாற்றங்களுடன் கூடிய புதிய எமிரேட்ஸ் ஐடியை அமீரக அரசு ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய எமிரேட்ஸ் ஐடி பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் புதிதாக அமீரக ரெசிடென்ஸ் விசா பெற்று எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது பழைய எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்கும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு புதிய எமிரேட்ஸ் ஐடி வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு புதிய ரெசிடென்ஸ் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தாலோ அல்லது விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தாலோ, அதற்கான விண்ணப்பத்துடன் ஒரு புகைப்படத்தையும் நாம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதற்காக நாம் சமர்ப்பிக்க வேண்டிய புகைப்படம் ஒரு சில தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் புகைப்படங்கள் மின்னணு அமைப்பால் நிராகரிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) சமீபத்தில் குடியிருப்பு அனுமதி மற்றும் அடையாள அட்டை விண்ணப்பங்களை மின்னணு முறையில் சமர்ப்பிப்பதற்கான செயல்முறையை புதுப்பித்தது, விண்ணப்பதாரர் தங்களின் புகைப்படத்தையும் அதில் பதிவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

மேலும் சர்வதேச அளவுகோல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகள் அடிப்படையில் வழங்கப்படும் தனிப்பட்ட புகைப்படங்களை மட்டுமே எமிரேட்ஸ் ஐடிக்கான ஸ்மார்ட் சிஸ்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வயதினருக்கும் ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் புகைப்படத்தைச் சமர்ப்பிக்க, பின்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவை,

>> ஆறு மாதங்களுக்கு மேல் மிகாமல் சமீபத்தில் எடுக்கப்பட்ட உயர் தரமான கலர் புகைப்படம் (அளவு: 40 – 35 மிமீ அகலம்)

>> புகைப்படத்தின் பின்னணி நிறம் வெள்ளை நிறமாக இருத்தல் வேண்டும்.
 

>> இயற்கையான, மிகைப்படுத்தப்படாத, நடுநிலையான முகபாவனையுடன் இருக்க வேண்டும்.

>> புகைப்படத்தில் இருப்பவரின் தலை சாய்க்காமல், நேராக, புகைப்பட லென்ஸுக்கு இணையாக இருத்தல் வேண்டும்.

>> புகைப்படத்தில் இருப்பவரின் கண்கள் கேமராவை நோக்கி திறந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கலர் லென்ஸ்கள் பயன்படுத்தல் கூடாது.

>> புகைப்படத்தில் இருப்பவர் கண்ணாடி அணிந்திருந்தால் அவை கண்களை மறைக்காத மற்றும் ஒளியைப் பிரதிபலிக்காதவாறு இருக்க வேண்டும்.

>> அணிந்திருக்கும் ஆடையானது பாஸ்போர்ட்டில் உள்ள ஆடையைப் போன்றதாக இருக்க வேண்டும்.

>> தலையை மறைப்பது தேசிய உடை அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்படும்.

>> புகைப்படத்தின் பிக்சல்கள் அளவானது மை தடயங்கள் அல்லது சுருக்கம் இல்லாமல் குறைந்தது 600 dpi ஆக இருத்தல் வேண்டும்.

​​மின்னணு முறையில் எமிரேட்ஸ் ஐடிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது, ​​தனிப்பட்ட புகைப்படங்களைச் செருகுவதற்கான நடைமுறைகளின் படிகளை ஆதரிப்பதற்காக, புகைப்படங்களுக்கான தரநிலைகளைப் பெறுவதில் நெகிழ்வுத்தன்மையை செயல்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் அமீரகத்தில் உள்ள புகைப்பட ஸ்டுடியோக்களுக்கு புகைப்படங்களுக்கான இந்தத் தேவைகள் மற்றும் தரநிலைகள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக ICP பயிற்சி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!