அமீரக செய்திகள்

துபாயில் போக்குவரத்தை எளிதாக்க புதிய பாலத்தினை திறந்த RTA…!! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

துபாய்-அல் அய்ன் சாலை முதல் ஷேக் முகமது பின் சயீத் சாலை வரையிலான, ரஸ் அல் கோர் சாலை வழியாக அமைக்கப்பட்ட ஷேக் ரஷீத் பின் சயீத் நடைபாதை மேம்பாட்டுத் திட்டமானது தற்பொழுது நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் திறக்கப்பட்ட சாலைகள் முழுமையாகச் செயல்பட ஆரம்பித்துள்ளதால், பயணிகளின் போக்குவரத்தினை இது எளிதாக மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) துபாயின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், சாலையை பயணிகளின் போக்குவரத்திற்கு வேகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துவதற்கும் இந்த பாலம் கட்டும் திட்டத்தினை கொண்டு வந்தது. மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் நான்கு பாலங்களை கட்டும் பணியானது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. அதிலும் ஒவ்வொரு பாலங்களின் தூரமும் இரண்டு கிலோமீட்டர் ஆகும்.

முந்தைய கட்டம்

முதல் கட்டமாக ராஸ் அல் கோர் சாலையானது ஒவ்வொரு திசையிலும் மூன்று முதல் நான்கு வழிச் சாலைகளாக விரிவு படுத்தப்பட்டு, இருபுறமும் இருவழிச் சேவை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் ஏற்கனவே இருந்த போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த திட்டமானது இயற்றப்பட்டது. சாலை திறக்கப்பட்டதும், தற்பொழுது ஒரு மணி நேரத்திற்கு 10,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாகனங்களின் பயண நேரமும் 20 நிமிடங்களிலிருந்து 7 நிமிடங்களாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டமானது, இந்த சாலைகளில் அன்றாடம் பயணிக்கும் பயணிகளிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், மக்கள் இந்த சாலை வழியாக பயம் இல்லாமல் பயணிக்கவும் வழிவகை செய்தது பாராட்டினை பெற்றுள்ளது.

 

இறுதி கட்டம்

துபாயின் நாத் அல் ஹமர் சாலை மற்றும் ராஸ் அல் கோர் சாலையின் இன்டர்செக்‌ஷன் பாதையை மேம்படுத்தும் நோக்கில் இருவழி பாலமானது 988 மீட்டர் அகலத்துடன் கட்டப்பட்டது. நாத் அல் ஹமர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் திரும்புவதற்கு ஏதுவாக ஃப்ரீ லெஃப்ட் டர்ன் வசதியுடன் இந்த பாலமானது அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், துபாய்-அல் அய்ன் சாலையின் திசையில், நாத் அல் ஹமர் சாலையில் இருந்து ராஸ் அல் கோர் சாலைக்கு வரும் வாகனங்களில் போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்காக மற்றொரு 115 மீட்டர் அகலம் உள்ள இருவழிப் பாலம் கட்டப்பட்டுள்ளது. எனவே, ராஸ் அல் கோர் சாலையில் இருந்து நாத் அல் ஹமாருக்குச் செல்லும் பாதையில் தற்பொழுது வாகன ஓட்டிகள் வசதியாக திரும்பும் அளவிற்கு சாலைகளானது அகலப்படுத்தப்பட்டுள்ளன.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!