அமீரக செய்திகள்

துபாயில் தற்காலிகமாக மூடப்படும் ஃபால்கன் இன்டர்செக்‌ஷன் சாலை.. பாதிக்கப்படும் பேருந்துகளின் பட்டியலை வெளியிட்ட RTA::!!

துபாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 9 முதல் ஜூலை 23 வரை எமிரேட்டில் உள்ள சில பொது பேருந்து வழித்தடங்களில் சேவை தாமதம் ஏற்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பேருந்து பயனர்களை அறிவுறுத்தியுள்ளது.

பர்துபாய் பகுதியில் அல் குபைபா பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பால்கன் இன்டர்செக்ஷன் ரோடு தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த இரு வாரங்களில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் என RTA தெரிவித்துள்ளது.

RTAவின் படி, “பேருந்து 6, 8, 9, 12, 15, 21, 29, 33, 44, 61, 61D, 66, 67, 83, 91, 93, 95, C01, C03, C05, C18, X13 ஆகியவை செல்லும் பேருந்து வழித்தடங்களில் சேவை தாமதம் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், X02, X23, E100, E306, E201, X92 & N55 ஆகிய பேருந்து வழித்தடங்களிலும் இன்று முதல் ஃபால்கன் இன்டர்செக்ஷன் சாலை மூடல் காரணமாக சேவை தாமதம் ஏற்படும். எனவே சுமூகமாகச் சென்றடைய சீக்கிரம் புறப்படுங்கள்” என்று RTA குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, நேற்று நள்ளிரவில் தொடங்கி ஜூலை 23 வரை எமிரேட்டின் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என வாகன ஓட்டிகளுக்கு RTA எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!