அமீரக செய்திகள்

அமீரகத்தில் நடைமுறைக்கு வரும் இரண்டரை நாள் விடுமுறை குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் 15 வருடத்திற்குப் பிறகு இந்த முறையானது மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அமீரக அரசின் சமீபத்திய அறிவிப்பின் காரணமாக வார இறுதி விடுமுறை நாட்களானது வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணி வரை ஊழியர்கள் வேலை செய்வார்கள். வெள்ளிக்கிழமை நடைபெறும் தொழுகையானது பிற்பகல் 1.15 மணிக்குப் பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டரை நாட்களுக்கு வார இறுதி விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய வாரத்தின் புதிய வேலை நாட்கள் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி நான்கரை நாள் வாரத்தின் வேலை நாட்களாக மாறும். வெள்ளிக்கிழமை பிற்பகல், சனி மற்றும் ஞாயிறு அரசாங்க ஊழியர்களுக்கான புதிய வார இறுதி விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய பணி அட்டவணை என்ன?

வேலை நாட்கள் வேலை நேரம்
திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 வரை
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

 

யாருக்கெல்லாம் இந்த இரண்டரை நாட்கள் விடுமுறை பொருந்தும்?

அமீரகத்தின் அரசு துறை நிறுவனங்கள் அனைத்திருக்கும் இந்த விடுமுறை பொருந்தும். தனியார் துறை நிறுவனங்கள் இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. விரும்பினால் இதே போல் விடுமுறை நாட்களை மாற்றிக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமையை அதிகாரப்பூர்வ வேலை நாளாக நிர்ணயித்த முதல் அரபு மற்றும் முஸ்லிம் நாடு ஐக்கிய அரபு அமீரகமா?

மொராக்கோ, துருக்கி, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களைப் பின்பற்றுகின்றன.

2022 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமைகளில் வரும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் என்ன நடக்கும்?

2022 ம் ஆண்டில் வரும் அதிகாரப்பூர்வ விடுமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைப்பட்டால் சரிசெய்யப்படும்.

வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்வது இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறுகிறதா?

இஸ்லாமிய ஷரியாவில் குறிப்பிட்ட நாளை விடுமுறையாக நிர்ணயிக்கும் விதியோ அல்லது உரையோ இல்லை. மேலும் வெள்ளிக்கிழமையில் அதிகாரப்பூர்வ வேலை நேரம் தொழுகை நேரத்திற்கு முன்பே முடிவடைகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் தனது வேலை வாரத்தை மாற்றியமைப்பது இதுவே முதல் முறையா?

இல்லை, ஐக்கிய அரபு அமீ்ரகம் தனது வார இறுதி நாட்களை மூன்று சந்தர்ப்பங்களில் திருத்தியுள்ளது. அவை:

1971-1999: வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ வார இறுதி விடுமுறை நாள்.

1999-2006: ஐக்கிய அரபு அமீரகம் வியாழக்கிழமையை வார இறுதியில் சேர்த்தது.

2006-2021: அமீரகம் வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு மாற்றியது.

புதிய வேலை நாட்களில் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் என்ன?

ஊழியர்களுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்தவும், புதிய திட்டங்கள், ஆய்வுகள் அல்லது நீண்ட வார இறுதிகளில் பயணம் செய்யவும் உதவுகிறது.

உலகளாவிய சந்தைகள் மற்றும் வங்கிகளுடன் முழு சீரமைப்பில் வணிகத்தை எளிதாக்குதல்.

உலகளாவிய போட்டித்திறன் குறியீடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தரவரிசையை உயர்த்துதல்.

உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் அரசாங்க செயல்திறனை மேம்படுத்துதல்.

புதிய வேலை நாட்களைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை அரசாங்க நிறுவனங்களுக்கு உள்ளதா?

அரசு நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் நெகிழ்வான வேலை நேரம் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வேலை நாட்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்துமா?

ஆம், அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் புதிய வேலை நாட்களை பின்பற்றும். கல்வி அமைச்சகமானது பள்ளிகள் செயல்படும் புதிய நேரத்தை அறிவிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!