அமீரக செய்திகள்

63 சதவீதம் குறைந்த குற்றவியல் அறிக்கைகள்.. துபாய் காவல்துறை தகவல்..!!

பொதுமக்களின் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் நகரங்களில் முதன்மையாக இருக்கும் துபாயில் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குற்றங்கள் குறைந்திருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பொதுத் துறையானது (CID) முந்தைய ஆண்டை விட 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் அறிக்கைகளில் 63.2 சதவீதம் குறைவாக பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி கூறுகையில், துபாயில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் புதுமையான பாதுகாப்புத் திட்டங்களே குற்றங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். துபாய் காவல்துறைத் தலைவர் CID க்கு பார்வையிட சென்றதைத் தொடர்ந்து இந்த அறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

துபாயின் குற்றத்தடுப்பு துறையானது துபாயில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த 422 குற்றவாளிகளை கைது செய்துள்ளது. குற்றத்தைத் தடுப்பதற்கும் குற்றத்திற்குப் பிந்தைய நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் பங்களிக்க கூடிய புதுமையான பாதுகாப்பு திட்டங்களையும் இத்துறை முன்வைத்துள்ளது.

மேலும் தொலைத்த பொருளை கண்டுபிடிக்கும் துறையானது 745 பேருக்கு தாங்கள் தொலைத்த பொருளை திரும்ப வழங்கியதுடன், தொலைத்த விலைமதிப்புள்ள பொருட்களை காவல்துறையிடம் ஒப்படைத்த 14 நேர்மையான நபர்களையும் கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!