அமீரக செய்திகள்

UAE: குழந்தைகளுக்கான உணவு பொருளை திரும்ப பெறும் நிறுவனம்..!! தொழிற்சாலையில் கண்டறியப்பட்ட சால்மோனெல்லா தொற்று..!!

அமீரகத்தில் சிறுவர்கள் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்றான Kinder Surprise chocolate-ன் உற்பத்தியாளரான Ferrero நிறுவனம், இந்த உணவுப்பொருள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் சால்மோனெல்லா வழக்குகள் பதிவாகியதால் அமீரகத்தில் இந்த தயாரிப்பை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் எந்தவொரு தயாரிப்பு பொருளும் சால்மோனெல்லாவிற்கான பாஸிட்டிவ் ரிசல்ட்டை பெறவில்லை என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இது பற்றி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “Ferrero இல், நுகர்வோர் பாதுகாப்பு எங்கள் முதல் முன்னுரிமை. இதற்கு இணங்க, பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் கின்டர் தயாரிப்புகளில் சால்மோனெல்லா தொடர்பான வழக்குகள் ஐரோப்பாவில் பதிவாகியதைத் தொடர்ந்து, ஃபெர்ரெரோ GCC, வளைகுடாவில் உள்ள எங்கள் நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்பு பொருளானது சால்மோனெல்லாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது”.

”கூடுதலாக, GCC இல் Ferrero மூலம் விற்கப்படும் தயாரிப்பு பொருட்களானது எட்டு தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்டாலும் ஒரே ஒரு பொருளான பெரிய Kinder Surprise Maxi 100 GR மட்டும் பெல்ஜிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட Kinder Surprise Maxi 100 GR இன் குறிப்பிட்ட தொகுதிகளை அக்டோபர் 1, 2022 அன்று காலாவதியாகும் தேதியுடன் தானாக முன்வந்து திரும்பப் பெறுவதற்கு Ferrero Gulf முடிவு எடுத்துள்ளது. இந்த திரும்பப்பெறுதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kinder தயாரிப்புகள் உட்பட மற்ற அனைத்து Ferrero தயாரிப்புகளும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படாது எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்து “இந்த தயாரிப்பு இனி வாங்குவதற்கு கிடைக்காது என்பதை உறுதிப்படுத்த சில்லறை விற்பனையாளர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். உங்களிடம் இந்த குறிப்பிட்ட தயாரிப்பு இருந்தால், அதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, ”என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!