அமீரக செய்திகள்

நாட்டில் நிலவிய மோசமான வானிலை முடிவுக்கு வந்ததாக அமீரக அரசு அறிவிப்பு.. இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை தொடரும் எனவும் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த திங்கள்கிழமை ஏப்ரல் 15 முதல் கனமழையுடன் கூடிய மோசமான வானிலை நிலவி வந்த நிலையில், இந்த நிலமையானது தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக அமீரக அரசு இன்று புதன்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “உள்துறை அமைச்சகம், தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய வானிலை மையம் மற்றும் மூலோபாய பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து, மோசமான வானிலையின் முடிவு அறிவிக்கப்படுகிறது, நாட்டில் வானிலை படிப்படியாக மேம்பட்டுள்ளது” என்று அமீரக அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிவில் பாதுகாப்பு, ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அவசரகால பதிலளிப்பு குழுக்கள், அமீரகம் முழுவதுமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தீவிர முயற்சிகளை தொடரும் என்றும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் அமீரகத்தை தாக்கிய மிகவும் மோசமான மழைப்பொழிவினை நேற்றைய தினம் குடியிருப்பாளர்கள் எதிர்கொண்டனர். மேலும் இந்த மோசமான வானிலை இன்று வரை நீடிக்கும் என்றும் வானிலை மையத்தால் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அடுத்த சில நாட்களுக்கு முன்னறிவிப்பு பிரகாசமான நாட்கள் வரும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் இன்று மழைக்குப் பிறகு, NCM இன் ஐந்து நாள் வானிலை அறிக்கையின்படி ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் மழை பெய்ய வாய்ப்பில்லை.

அதேவேளையில், நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 18 முதல் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான நிலை நீடிக்கும் எனவும், சனிக்கிழமை வரை மூடுபனிக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!