அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராத தள்ளுபடிக்கான காலக்கெடுவை நீட்டித்த எமிரேட்… 50% தள்ளுபடி தொடரும் என தகவல்…!!

வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு அது முடிவடையவிருக்கும் நிலையில் இந்த திட்டத்தை மேலும் நீட்டிப்பதாக அஜ்மானில் உள்ள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் அஜ்மானில் இருக்கும் வாகன ஓட்டிகள் இப்போது ஜனவரி 14, 2022 வரை இந்த திட்டத்தின் மூலம் அபராத கட்டணத்தில் தள்ளுபடியை பெற முடியும்.

இந்தத் திட்டம் அஜ்மானில் முன்பு டிசம்பர் 31, 2021 அன்று முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தள்ளுபடியில் வாகன ஓட்டிகள் தங்கள் போக்குவரத்து புள்ளிகளை ரத்து செய்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க முடியும் என்று அஜ்மான் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நவம்பர் 21, 2021 க்கு முன் அஜ்மான் எமிரேட்டில் விதிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும். இருப்பினும், கடுமையான குற்றங்களை புரிந்தோருக்கு இத்திட்டம் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சேவை மையங்கள், Sahl சாதனங்கள், அஜ்மான் போலீஸ் (ajman police) அல்லது தகவல் அமைச்சக (ministry of information) செயலி மூலம் நான்கு வெவ்வேறு முறைகளில் இந்த அபராதத்திற்கான பணம் செலுத்தலாம் என்பதையும் வாகன ஓட்டிகளுக்கு ஆணையம் நினைவூட்டி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!