அமீரக செய்திகள்

UAE: வெளிநாட்டவர்கள் அரசு நிறுவனங்களில் 10,000 முதல் 50,000 திர்ஹம்ஸ் வரை சம்பளம் பெறலாம்..!! காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

உலகளவில் பெரும்பாலான மக்கள் அரசாங்க மற்றும் பொதுத் துறை சார்ந்த வேலைகளையே விரும்புகின்றனர், இது அமீரகத்திலும் வேறுபட்டதல்ல. அமீரகத்தின் உள்ளூர் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், திறமையான மற்றும் திறமையற்றவர்கள் என குறிப்பிடத்தக்க ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன், துபாய் மகளிர் நிறுவனம், நிதித் துறை, முகமது பின் ரஷீத் அரசு பள்ளி மற்றும் பிற அரசு நிறுவனங்கள் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக விளம்பரம் செய்துள்ளன. இந்த வேலைகளுக்கு வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலைகளில் பெரும்பாலானவை தொழில் வல்லுநர்கள் மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோல, சில பொது நிறுவனங்கள் பதவியின் தன்மையைப் பொறுத்து 10,000 திர்ஹம் முதல் 50,000 திர்ஹம் வரை சம்பளம் வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. வேலைக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய நபர்கள் மற்றும் அனைத்து நாட்டினரும் அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. துபாய் அரசாங்க நிறுவனங்களால் பட்டியலிடப்பட்ட முழுநேர வேலைகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களுக்கான 20 வேலைகள்:

1. ஹெபடோபிலியரிக்கான பொது அறுவை சிகிச்சை ஆலோசகர் (Consultant-General Surgery for Hepatobiliary) – துபாய் மருத்துவமனை

  • நிறுவனம்: துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன்
  • சம்பளம்: 40,000-50,000 திர்ஹம்
  • தகுதி: அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பள்ளியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்/பெல்லோஷிப்/போர்டு அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு

2. ரேடியோகிராஃபர்:

  • நிறுவனம்: துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன்
  • சம்பளம்: 10,000 திர்ஹம்களுக்கும் குறைவானது
  • தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ரேடியோகிராஃபியில் இளங்கலை பட்டம்/உயர் டிப்ளமோ

3. மல்டிமீடியா நிபுணர்:

  • நிறுவனம்: முகமது பின் ரஷித் அரசு பள்ளி
  • சம்பளம்: 10,000-20,000 திர்ஹம்
  • தகுதி: திரைப்பட ஆய்வுகள், ஒளிப்பதிவு, மல்டிமீடியா, டிஜிட்டல் தயாரிப்பு அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம். தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது கூடுதலாக இருத்தலும் நல்லது.

4. வடிவமைப்பாளர் (Instructional Designer):

  • நிறுவனம்: முகமது பின் ரஷித் அரசு பள்ளி
  • சம்பளம்: Dh10,000-20,000 திர்ஹம்
  • தகுதி: கல்வி, அறிவுறுத்தல் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம். முதுகலைப் பட்டம் பெற்றவராக இருந்தால் கூடுதல் சிறப்பு. பயிற்சி வடிவமைப்பில் 5 வருட அனுபவம் அல்லது உயர் கல்வி சூழலில் அனுபவம் இருப்பது நல்லது.

5. தலைமை அமைப்புகள் அதிகாரி (Chief Systems Officer):

  • நிறுவனம்: நிதித் துறை
  • தகுதி: இளங்கலை பட்டத்துடன் எட்டு வருட அனுபவம் அல்லது அதற்கு சமமான அல்லது தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டத்துடன் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. தலைமை வணிக தொடர்ச்சி நிபுணர் (Chief Business Continuity Specialist):

  • நிறுவனம்: நிதித் துறை
  • தகுதி: இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான 16 ஆண்டு அனுபவம்; முதுகலை பட்டத்திற்கான எட்டு வருட அனுபவம்; இதே போன்ற துறைகளில் முனைவர் பட்டம் (PhD) பெற ஆறு ஆண்டுகள்

7. சீனியர் ஐடி(IT) ஆடிட்டர்:

  • நிறுவனம்: நிதி தணிக்கை ஆணையம்
  • தகுதி: கணினி அறிவியல் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல்.

8. நிதி தணிக்கையாளர் (Financial Auditor):

  • துறை: நிதி தணிக்கை ஆணையம்
  • தகுதி: கணக்கியல்/நிதித்துறையில் இளங்கலை பட்டம் தேவை.

9. தலைமை நிபுணர் – நிறுவன கட்டிடக்கலை:

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA)
  • தேவை: ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங், புரோகிராம் மேனேஜ்மென்ட் புரொபஷனல் (PgMP) ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தகுதி பெறுவார்கள்.

10. மருத்துவ உணவியல் நிபுணர் (ரஷித் மருத்துவமனை)

  • நிறுவனம்: துபாய் அகாடமிக் ஹெல்த் கார்ப்பரேஷன்
  • தேவை: இளங்கலை பட்டம் பெற்றவர்கள்.

11. உடற்பயிற்சி மேற்பார்வையாளர்

  • நிறுவனம்: துபாய் மகளிர் எஸ்டாப்ளிஷ்மன்ட் (Dubai Women Establishment)
  • தேவை: உயர் டிப்ளமோ

12. துபாய் உரிம நிபுணர் (Dubai Licensing Expert):

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் மற்றும் 13-15 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.

13. தலைமைப் பொறியாளர் – நகர்ப்புற திட்டமிடல் & வாழ்க்கைத் தரம்

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

14. மூத்த பொறியாளர் – கார்ப்பரேட் பாதுகாப்பு

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியலில் (Electronic Engineering) இளங்கலை பட்டத்துடன் 3-7 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் வேண்டும்.

15. சீனியர் இன்டெர்னல் ஆடிட்டர்:

நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்

தேவை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து நிதி, கணக்கியல்/IT ஆகியவற்றில் இளங்கலை பட்டத்துட 5 வருட பணி அனுபவம் உடையவர்கள். மோசடி விசாரணை/தேர்வு மற்றும் இன்டெர்னல் ஆடிட்டிங் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. திட்ட மேலாளர் – செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அறிவியல் (Data Science)

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: கணினி அறிவியலில் இளங்கலை அல்லது பிஎம்பியுடன் சமமான பட்டம் மற்றும் முதுகலை விரும்பத்தக்கது; 8 வருட பணி அனுபவம்.

17. சீனியர் இன்டெர்னல் ஆடிட்டர் – செயல்பாடுகள் & பெருநிறுவன ஆதரவு தணிக்கை

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணக்கியல்/நிதி/வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான தொடர்புடைய பணி அனுபவம்.

18. மூத்த நிபுணர் – தரம், சுகாதாரம், பாதுகாப்பு & நிலைத்தன்மை அலுவலகம்

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: இளங்கலை பட்டம்

19. தலைமை நிபுணர் – தரவு மேலாண்மை (Data Management)

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: டேட்டா சயின்ஸ்/ கணினி அறிவியல்/ புள்ளியியல்/ கணிதம்/ ஆராய்ச்சியில் முதுகலை பட்டதுடன் ஹடூப் மற்றும் பிக் டேட்டா (Hadoop and Big Data) மேனேஜ்மென்ட் டெக்னாலஜிகளுடன் ஹேண்ட்-ஆன் அனுபவம் விரும்பத்தக்கது.

20. தலைமை நிபுணர் – சேவைகள் உத்தரவாதம் மற்றும் மேம்பாடு (Services Assurance & Improvement)

  • நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
  • தேவை: வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் அல்லது நன்கு அறியப்பட்ட பல்கலைக்கழகத்தில் தரம்.

மேற்கூறப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தயக்கமின்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!