அமீரக செய்திகள்

UAE: புதிய இலவச டிரைவ்-த்ரூ பரிசோதனை மையத்தை திறந்துள்ள ஃபுஜைரா… தினமும் சேவை வழங்கப்படும் என அறிவிப்பு…!!

ஃபுஜைராவில் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து புஜைரா காவல்துறையால் இலவச டிரைவ்-த்ரூ கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஃபுஜைரா காவல்துறையின் தலைமைத் தளபதி மற்றும் புஜைராவில் உள்ள அவசரநிலை, நெருக்கடிகள் மற்றும் பேரிடர் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் பின் கானெம் அல் காபி மற்றும் ஃபுஜைரா மருத்துவ மாவட்ட இயக்குனர் டாக்டர் முகமது அப்துல்லா ஆகியோர் ஜனவரி 31, 2022 அன்று இந்த சையத் மையத்தை திறந்து வைத்தனர்.

மேஜர் ஜெனரல் அல் காபி கூறுகையில், இந்த சோதனைச் சேவை இலவசமாக வழங்கப்படும் என்றும், இதன் மூலம் நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்துவதுடன், மற்ற மையங்களின் வேலை சுமையைக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஃபுஜைரா காவல்துறையின் செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் அப்துல் ரஹ்மான் முகமது அல் தன்ஹானி கூறுகையில், ஃபுஜைரா காவல்துறை தலைமையகத்திற்கு (Fujairah Police General Headquarters) அடுத்ததாக அமைந்துள்ள இந்த சோதனை மையம் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சேவையைப் பெற விரும்பும் பொதுமக்கள் தங்களது ID-யை வைத்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடித்து, வாகனங்களின் வரிசையில் சென்று சோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!