அமீரக செய்திகள்

UAE: கழிவுகளில் இருந்து சுத்தமான மின்சாரம் தயாரிக்கும் திட்டம்!! கார்பன் உமிழ்வைக் குறைக்க துபாய் மேற்கொள்ளும் உத்தி….

துபாயில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் உத்திக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள அரசாங்க நிறுவனங்கள் இணைந்து முஹைஸ்னா 5 இல் உள்ள எமிரேட்டின் குப்பைக் கிடங்கில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய உயிரி வாயுக்களிலிருந்து சுத்தமான மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்க உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த வியாழன் (டிசம்பர் 7) அன்று, துபாய் முனிசிபாலிட்டி (DM) மற்றும் துபாய் மின்சார நீர் ஆணையம் (Dewa) ஆகிய இரு அரசாங்க நிறுவனங்களும் குப்பை கழிவுகளை சிதைப்பதால் வரும் வாயுக்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் கழிவு மேலாண்மை, மறுசுழற்சியை மேம்படுத்துதல் மற்றும் கழிவுகளின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான முனிசிபாலிட்டியின் திட்டங்களுக்கு உள்ளது என்று துபாய் முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி அவர்கள் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த கூட்டாண்மை அமீரகத்தின் நிலைத்தன்மை இயக்கம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜீரோ எமிஷன் உத்தி 2050 திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வருகிறது.

இது தொடர்பாக Dewaவின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO சயீத் முகமது அல் டயர் அவர்கள் பேசுகையில், துபாய் சுத்தமான எரிசக்தி வியூகம் 2050 (Dubai Clean Energy Strategy 2050)மற்றும் துபாய் நிகர ஜீரோ கார்பன் உமிழ்வு உத்தி 2050 (Dubai Net Zero Carbon Emissions Strategy 2050) ஆகியவற்றில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்ற நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

அந்தவகையில், 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத தூய்மையான மூலங்களிலிருந்து 100 சதவீத ஆற்றலை உற்பத்தி செய்வதே இலக்கு என்பதையும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவதன் மூலம், அடுத்த இரண்டு தசாப்தங்களில் புதிய, நீண்ட கால தூய்மையான திட்டங்களை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், COP28 இல் ஒரு மூலோபாய கூட்டாளராக DM பங்கேற்பதன் ஒரு பகுதியாகும். இந்த காலநிலை மாநாட்டில் கலந்துகொள்ள 1,000 க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் நகரங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு நாடு எவ்வாறு எதிர்காலத்தில் நிலையான நகர்ப்புற சமூகங்களை திட்டமிடுகிறது, வடிவமைத்து மற்றும் உருவாக்குகிறது என்பதை DM காட்சிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!