அமீரக செய்திகள்

UAE: தனியார் துறை ஊழியர்களுக்கு மீலாது நபி விடுமுறை அறிவிப்பு..!!

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ம் தேதி வியாழக்கிழமை அமீரகத்தின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அமீரக அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

மேலும், இதன் மூலம், பொதுத்துறை ஊழியர்களுக்கு இம்மாத இறுதிப் பகுதியில் வியாழன், வெள்ளி, சனி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்றும் அக்டோபர் 24, ஞாயிற்றுக்கிழமை முதல் ஊழியர்கள் மீண்டும் தங்களின் பணிக்குத் திரும்பலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்பொழுது அமீரகத்தில் தனியார்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி மீலாது நபியை முன்னிட்டு ஒரு நாள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மனித வள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால், தனியார்துறை ஊழியர்களுக்கு வார இறுதியில் தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறையும், சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!