அமீரக செய்திகள்

துபாய்: பார்க்கிங் விதிகளை மீறினால் வாகனம் பறிமுதல்.. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட RTA..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) திங்களன்று எமிரேட்ஸ் பார்க்கிங் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் இனி பார்க்கிங் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில் இந்த ஒப்பந்தமானது சட்டங்களை மீறும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய அனுமதிக்கிறது என கூறப்பட்டுள்ளது. புதிதாக கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வாகன பார்க்கிங் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததற்காக இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் டிரெய்லர்கள் (trailers) RTA பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், RTA மற்றும் எமிரேட்ஸ் பார்க்கிங் ஆகிய இரு நிறுவன அமைப்புகளும் பிணைப்பு முறையை மேம்படுத்த இணைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்வதற்கும் பொருந்தக்கூடிய கட்டணங்களைக் கணக்கிடுவதற்கும் இது போக்குவரத்து மற்றும் மின்னணு அமைப்புகளுடன் அவற்றை இணைக்கிறது. அந்த வாகனங்களை ஏலம் விடுவதற்கான அனைத்து பதிவுகளையும் இந்த அமைப்பு பராமரிக்கிறது. இந்த ஒப்பந்தம் வாகனத்தை பறிமுதல் செய்யும் செயல்முறையின் நிர்வாகத்தையும் உள்ளடக்கியது, இதில் வாகனத்தை பறிமுதல் செய்வதற்கு தேவையான வாகனங்களை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது பிரதிநிதிகளிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்யும் இடத்தில் பெறுவது போன்றவையும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 2022 இல் துபாயில் பொது பார்க்கிங் இயந்திரங்களின் தானியங்கி மற்றும் புதுப்பிப்பை RTA நிறைவு செய்தது. இது வாகன விவரங்களை உள்ளிடுவதற்கு உதவும் டச்ஸ்கிரீனுடன் பொருத்தப்பட்டது. மேலும் இதில் m-பார்க்கிங் முறையைப் பயன்படுத்தி மொபைல் ஃபோன்களுக்கு அனுப்பப்படும் SMS-களில் இ-டிக்கெட் வழங்கப்படும் என்றும் காகிதத்தில் டிக்கெட் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எமிரேட்ஸ் பார்க்கிங்கானது காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு போதுமான வாகன நிறுத்துமிடங்களை வழங்குவதற்கும், வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிப்பதற்கு மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட் சிஸ்டம்களை வழங்குவதற்கும் உண்டான சேவைகளை வழங்குகிறது. அத்துடன் 24/7 என வாரத்தின் அனைத்து நாட்களும் திறமையான ஆட்களைக் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முழுமையான CCTV கண்காணிப்பு கேமராக்களையும் இது கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!