அமீரக செய்திகள்

வெளிநாடுகளுக்கு செல்கையில் ஷாப்பிங்கிற்காக அதிகம் செலவழிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள்..!! பெரும்பாலானோர் விரும்பி வாங்கக்கூடிய பொருட்கள் என்ன தெரியுமா..??

வெளிநாட்டுப் பயணத்தின் போது ஷாப்பிங்கிற்காக உலகளவில் அதிகம் செலவு செய்பவர்களில் ஒருவர்களாக அமீரகக் குடியிருப்பாளர்கள் உள்ளனர் என சமீபத்திய புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அமீரகத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்காக பயணித்தால் சராசரியாக 4,037 திர்ஹம்களை ($1,100) அவர்கள் செலவழிப்பதாக புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இது உலக சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவீனமான 292 டாலர்களை விட கிட்டத்தட்ட 277 சதவீதம் அதிகம் என்று உலக பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel and Tourism Council) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அமீரக மக்கள் வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் அதிகம் செலவிடுவதற்கு, அமீரகத்தில் தனிநபர் ஈட்டும் அதிக வருமானமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அமீரகத்தில் தனிநபர் வருமானம் கடந்த 2022 இல் 87,729 டாலர்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பவர் பர்ச்சேசிங் சமநிலையின் (power purchasing parity -PPP) அடிப்படையில், உலகின் 6 வது மிக உயர்ந்த மற்றும் உலக சராசரியை விட 425 சதவீதம் அதிகமான வருமானம் என்று கூறப்படுகிறது.

அமீரகத்தைப் போன்றே, சீனா, அர்ஜென்டினா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் குடியிருப்பாளர்கள், முறையே $1,350, $1,180 மற்றும் $1,050 எனத் தங்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போது ஷாப்பிங்கிற்காக செலவழித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

அமீரக பயணிகள் ஷாப்பிங் செய்யும் இடம்:

உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் வெளியிட்ட தரவுகளின் படி, அமீரக பயணிகள் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது நகைகள் மற்றும் கடிகாரங்களுக்காக சுமார் 18 சதவீதத்தை செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து எலக்ட்ரிக்கல்ஸ், கேமராக்கள் மற்றும் எலக்டரிக் உதிரிபாகங்களில் 17 சதவீதத்தையும், ஆடைகள் மற்றும் காலணிகளில் 16 சதவீதத்தையும், அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களில் 16 சதவீதத்தையும், F&B மற்றும் புகையிலைக்கு 15 சதவீதம், தோல் மற்றும் செயற்கை பொருட்களளுக்கு 9 சதவீதம் மற்றும் மற்றவற்றில் 9 சதவீதத்தையும் செலவழிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அமீரக சுற்றுலாப் பயணிகள் பிராண்டட் பொருட்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது மேல்மட்ட இடங்களிலிருந்து பொருட்களை வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

ஷாப்பிங்கிற்கான அவர்கள் தேர்வ செய்யும் இடங்கள்:

  •  ஹை-ஸ்ட்ரீட் கடைகள் / வணிக வளாகங்கள் / டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்.
  • ஸ்ட்ரீட் மார்க்கெட்/பஜார்
  • வரி இல்லாத கடைகள்
  • பொடிக்குகள் (Boutique) /கைவினைஞர் கடைகள்.

இது குறித்து WTTC இன் தலைவர் மற்றும் CEO ஜூலியா சிம்ப்சன் அவர்கள் கூறுகையில், விற்பனை நிலையங்கள் மற்றும் பிற சில்லறை விற்பனையகங்கள் பயண மற்றும் சுற்றுலாத் துறையின் மீட்சிக்கு ஒரு உந்து சக்தியாக இருப்பதுடன் வருவாய், வேலை வாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயணிகள் தங்களின் தனித்துவத்தை குறிப்பிடுவதற்காக உண்மையான பிராண்டுகள் மற்றும் ஆடம்பரமான அமைப்பில் ஆடம்பர பிராண்டுகளைத் தேடுகின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார். WTTC கணக்கெடுப்பின் படி, தரமான தயாரிப்புகளுக்கு அமீரக, அமெரிக்கா, இந்தியா மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் 20 சதவீதத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!