அமீரக செய்திகள்

ஈத் அல் அத்ஹா: துபாய் மெட்ரோ, டிராம், பேருந்து இயங்கும் நேரங்களை அறிவித்த RTA..!!

அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை முன்னிட்டு துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்துகள் இயங்கும் நேரங்களை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. மேலும் வாகன சோதனை மையங்கள் மற்றும் RTA வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஜூலை 19 முதல் 22 வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் குடியிருப்பாளர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்குமாறு RTA வலியுறுத்தியுள்ளது.

முன்னோக்கி பயணங்களைத் திட்டமிடவும், கூட்டம் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க நிலையங்களுக்கு விரைவாக வந்து சேரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோ இயங்கும் நேரங்கள்

  • திங்கள் முதல் வியாழன் வரை (ஜூலை 19-22): அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
  • வெள்ளிக்கிழமை (ஜூலை 23): காலை 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
  • சனி (ஜூலை 24): அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 வரை.

துபாய் டிராம் இயங்கும் நேரங்கள்

  • திங்கள் முதல் வியாழன் வரை (ஜூலை 19-22): காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
  • வெள்ளிக்கிழமை (ஜூலை 23): காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
  • சனி (ஜூலை 24): காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை.

பொது பேருந்துகள் இயங்கும் நேரங்கள்

  • கோல்ட் சூக் (gold souq) நிலையம் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள்: அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை
  • அல் குபைபா நிலையம் (al ghubaiba station): அதிகாலை 4.15 முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
  • சத்வா நிலையம் (satwa station) உள்ளிட்ட துணை நிலையங்கள்: அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை
  • ரூட் C01: இது முழுநேரமும் இயங்கும்
  • அல் குசைஸ் நிலையம் (al qusais station): அதிகாலை 4.30 முதல் 12.04 வரை
  • அல் கூஸ் தொழில்துறை நிலையம் (al qouz industrial station): அதிகாலை 5.05 முதல் இரவு 11.30 மணி வரை
  • ஜெபெல் அலி நிலையம் (jebel ali station): அதிகாலை 4.58 முதல் நள்ளிரவு 12.15 வரை

நகரங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் கமர்ஷியல் கோச்சஸ் செயல்படும் நேரங்கள்

  • அல் குபைபா போன்ற துணை நிலையங்கள்: காலை 6.40 மணி முதல் இரவு 10.20 மணி வரை
  • யூனியன் ஸ்கொயர் (union square): அதிகாலை 4.25 மணி முதல் நள்ளிரவு 12.15 வரை
  • எடிசலாட் மெட்ரோ நிலையம்: காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
  • அபு ஹெயில் மெட்ரோ நிலையம்: காலை 6.20 மணி முதல் இரவு 10.40 மணி வரை
  • ஹத்தா நிலையம்: காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!