அமீரக செய்திகள்

துபாய் பார்க்கில் இந்த வாரம் முழுவதும் செயற்கை மழை ..!! கோடை வெயிலில் ஜில்லென்ற மழைச்சாரலை அனுபவிக்க குடியிருப்பாளர்களுக்கு ஓர் வாய்ப்பு…

துபாயில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் இவ்வேளையில், ஜில்லென்ற மழைச்சாரலை அனுபவிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்காகவே செயற்கை மழை மற்றும் நீர் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ‘Rainy Summer’ நிகழ்வை துபாய் முனிசிபாலிட்டி உருவாக்கியுள்ளது.

அமீரக குடியிருப்பாளர்கள் வெப்பத்தைத் தணித்து, தங்கள் குடும்பத்துடன் வெளியில் ஒரு நாளை ஜில்லென்று அனுபவித்து மகிழ்வதற்கு ஏற்றவாறு, ஃபெர்ஜான் துபாய் எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘Rainy Summer’ எனும் இந்த நிகழ்வை துபாய் முனிசிபாலிட்டி தொடங்கியுள்ளது.

துபாய் முனிசிபாலிட்டி இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அல் பர்ஷா பான்ட் பார்க்கில் (Al Barsha Pond Park) ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 20, 2023 வரையிலும், அல் வர்கா 3 பூங்காவில் (Al Warqa 3 Park) ஆகஸ்ட் 23 முதல் 27 வரையிலும் செயற்கை மழை நிகழ்வுகள் நடைபெறும் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வில் பனி சோப் செயல்பாடுகளும் அடங்கும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

மேலும், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆப்பிரிக்க டிரம் போன்ற குழந்தைகளுக்கான ஒர்க் ஷாப்புகள் போன்றவையும் இதில் இடம்பெறும். அத்துடன் இந்த இரு பூங்காக்களும் வார நாட்களில் மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 11:00 மணி வரையிலும் குடியிருப்பாளர்களுக்காக திறந்திருக்கும் எனவும் துபாய் முனிசிபாலிட்டி குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் போது தங்கள் குழந்தைகளுடன் தங்க விரும்பும் மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஓய்வு கூடாரங்களும், அத்துடன் பல்வேறு வகையான உணவு மற்றும் பானங்களுடன் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இங்கு திறந்திருக்கும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

இது குறித்து துபாயின் பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் துறையின் (Department of Public Parks and Recreational Facilities) இயக்குனர் அஹ்மத் அல் ஜரூனி என்பவர் கூறுகையில், ‘Rainy Summer’ குழந்தைகளுக்கு கோடை காலத்தை அதன் தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான செயல்பாடுகளுடன் அனுபவிக்க வளமான அனுபவங்களை வழங்கும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!