அமீரக செய்திகள்

எக்ஸ்போ-2020 துபாயில் உலக சாதனை படைத்த தமிழ் பெண்மணி… நீண்ட நேரத்திற்கு யோகா செய்து அசத்தல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 துபாயில் தமிழகத்தினை சேர்ந்த யோகா சிரோன்மணி, யோகா ஆச்சார்யா, சித்தாந்த ரத்னா பட்டம் பெற்ற திருமதி. அம்ருதா ஆனந்த் M.E ., (M.Sc., M.Phil., Ph.D) அவர்கள் யோகாசனத்தில் உலக சாதனையை படைத்துள்ளார். இது இவரின் பத்தாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போவில் கடந்த 16.12.2021 அன்று மாலை 4.30 மணி அளவில் இந்தியன் பெவிலியன் அரங்கில் “யோகநித்ரா” என்ற யோகாசனத்தை இவர் மேற்கொண்டார். இந்த ஆசனத்தை விடாமல் தொடர்ந்து 22 நிமிடங்கள் 01 வினாடிக்கு இவர் மேற்கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் அம்ருதா அவர்கள் படைத்த உலக சாதனைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அவை:

2013 – இல் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 7 நிமிடம் 30 வினாடிகள் இருந்து உலக சாதனை செய்துள்ளார்.

2014 – இல் இரண்டாம் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 20 நிமிடம் இருந்துள்ளார். அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்

2015 – இல் மூன்றாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 2
மணி நேரத்தில் செய்து உலக சாதனை செய்துள்ளார்.

2015 – இல் நான்காம் உலக சாதனையாக வேகன் யோகா மாரத்தான் 27 மணி நேரம் 30 நிமிடம் செய்துள்ளார்.

2015 – இல் ஐந்தாம் உலக சாதனையாக 108 சூரிய நமஸ்காரம் 18 நிமிடத்தில் செய்துள்ளார்.

2017 – இல் ஆறாம் உலக சாதனையாக 108 யோகாசனத்தை நீரில் மிதந்துகொண்டு செய்துள்ளார்.

2018 – இல் ஏழாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 4 மணிநேரம் 3 நிமிடத்தில் செய்துள்ளார் (மலேஷியா).

2019 – இல் எட்டாம் உலக சாதனையாக பூர்ண தனுராசனம் 15 நிமிடம் 10 வினாடிகள் செய்துள்ளார் (சீனா பெருஞ்சுவர்)

2020 – இல் ஒன்பதாம் உலக சாதனையாக ஏக பதசனம் 35 நிமிடம் செய்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!