அமீரக செய்திகள்

துபாய் – அஜ்மான் இடையே பயண நேரம் இனி பாதியாக குறையும்.. ஐந்து பாதைகளுடன் பயண்பாட்டிற்கு வந்த ‘அல் இதிஹாத் ஸ்ட்ரீட் திட்டம்’..!!

அஜ்மானில் சுமார் ஒரு வருடமாக நடைபெற்று வந்த அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை நிறைவு செய்ததாக எமிரேட்டின் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறை அறிவித்துள்ளது. மேலும் இது நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து ஷேக் கலீஃபா இன்டர்செக்சனை நோக்கி வரும் அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் சாலையில் மூன்று பாதைகளைக் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அதனுடன், அல் இத்திஹாத் மற்றும் குவைத் ஸ்ட்ரீட்களின் இன்டர்செக்சனில் ஒரு போக்குவரத்து சிக்னலும் அமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, அல் ஹசன் பின் அல் ஹைதம் ஸ்ட்ரீட்டில் இருந்து அஜ்மான் நோக்கி செல்லும் சாலை, அஜ்மான் இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருந்து ஷார்ஜாவை நோக்கி வரும் சாலையில் போக்குவரத்தை எளிதாக்க பாலம் கட்டப்படுகிறது.

தற்போது, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த சாலையானது, ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்களை அனுமதிக்கும் திறன் கொண்ட ஐந்து பாதைகளை கொண்டுள்ளது. மேலும் இதனால் வாகன ஓட்டிகளின் பயண நேரம் முன்பை விடவும் 50 சதவீதம் குறையும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த சாலை மேம்பாட்டுப் பணியின் முதல் கட்டம் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே முடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஜ்மான் எமிரேட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து சீரான போக்குவரத்திற்கு வழிவகுக்க இந்த அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!