அமீரக செய்திகள்

UAE: ஈத் அல் அதாவை முன்னிட்டு பார்க்கிங் மற்றும் டோல் கேட்டுக்கு கட்டணம் கிடையாது.. அபுதாபி போக்குவரத்து மையம் அறிவிப்பு..!

அமீரகத்தில் உள்ள மத்திய அரசு துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல்அதா விடுமுறை 4 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் (FAHR) கூறுகையில், அமீரகத்தில்பணிபுரியும் ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை 4 என நாட்கள்என்றும் ஜூலை12ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஈத் அல் அதா விடுமுறையை முன்னிட்டு பொது பார்க்கிங் மற்றும் டோல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 8 முதல் ஜூலை 12 செவ்வாய்க்கிழமை காலை 7.59 வரை பார்க்கிங் மற்றும் டோல் கட்டணமும் இலவசம் என்று I TC அபுதாபி தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!