அமீரக செய்திகள்

அமீரகத்தில் பணிபுரியும் ஊழியரின் ஒர்க் பெர்மிட்டை நிறுத்தக்கூடிய 10 சூழ்நிலைகள்.. தெளிவுபடுத்திய MoHRE ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா? பின்வரும் சட்டப்பூர்வ பத்து சூழ்நிலைகளில் உங்கள் முதலாளி உங்களின் வேலை ஒப்பந்தத்தை உடனடியாக எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நிறுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) படி, ஊழியர்களின் வேலை ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக நிறுத்தப்படும் சூழ்நிலைகள் எவை என்பதே இங்கே காணலாம்.

1. அமீரகத்தில் பணிபுரியும் ஒருவர் வேறொருவரைப் போல் ஆள்மாறாட்டம் செய்திருந்தால் அல்லது போலியான ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களை சமர்பித்து வேலையில் செர்ந்தது கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய முடியும்.

2. தொழிலாளர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு தவறு செய்து, அந்த தவறால் முதலாளிக்கு கணிசமான பொருள் இழப்பை ஏற்படுத்தினால், அல்லது வேண்டுமென்றே முதலாளியின் சொத்துக்களை சேதப்படுத்தினால் உடனடியாக பணிநீக்கம் செய்ய முடியும்.

3. பணிபுரியும் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் மற்ற ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பான நிறுவனத்தின் உள் விதிமுறைகளை ஊழியர் ஒருவர் மீறினால் அவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கும் உரிமை முதலாளிக்கு உண்டு.

4. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஊழியர் தனது கடமைகளைச் செய்யத் தவறினால் மற்றும் அது குறித்து அந்த ஊழியருக்கு முறையாக எச்சரிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து அவற்றை மீறினால் உடனடியாக பணியிலிருந்து நீக்கலாம்.

5. பணிபுரியும் ஒரு ஊழியர் தன் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அல்லது நிறுவனத்திற்கு வர வேண்டிய வாய்ப்பைத் தவறவிடும் வகையில் அல்லது தனிப்பட்ட பலன்களுக்காக நிறுவனத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் பணிநீக்கம் செய்யலாம்.

6. பணி நேரத்தில் மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு, ஊழியரின் மனநிலை சரியில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அல்லது பணியிடத்தில் பொது ஒழுக்கத்தை மீறும் செயலைச் செய்தால் அவர்களையும் உடனடியாக வேலையிலிருந்து நீக்கலாம்.

7. நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய சக ஊழியர்கள், மேலாளர் அல்லது முதலாளி என யாரையேனும் ஒரு ஊழியர் தாக்கினால் முன்அறிவிப்பின்றி வேலையிலிருந்து நீக்கும் உரிமை முதலாளிக்கு உண்டு.

8. ஒரு வருடத்தில் 20 இடைவிடாத விடுமுறை அல்லது ஏழு நாட்களுக்கு மேல் அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்ததற்கான சரியான காரணத்தை ஊழியர் ஒருவர் வழங்கத் தவறினாலும் பணிநீக்கம் செய்ய முடியும்.

9. ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட பலனுக்காக அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வகிக்கக்கூடிய தனது பதவியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அல்லது அதனால் ஆதாயம் அடைந்தது கண்டறியப்பட்டால் அவரை வேலையை விட்டு நீக்க முதலாளிக்கு அனுமதி உண்டு.

10. பணிபுரியக் கூடிய நிறுவனத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் ஊழியர் ஒருவர் வேறொரு நிறுவனத்தில் சேர்ந்தால் அந்த ஊழியரை முன்அறிவிப்பின்றி முதலாளி பணியிலிருந்து நீக்கலாம்.

இது போன்ற உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!