வளைகுடா செய்திகள்

அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து, வாங்காத வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 70%க்கு மேல் அதிகரிப்பு… கடுமையான அபராதம் விதிக்கப்படும் என குவைத் அரசு எச்சரிக்கை..!!

குவைத் நாட்டில் சிவில் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து, அவற்றினை பெறாமல் இருப்பதால் அரசு புதிய விதி முறையினை வகுத்துள்ளது. அதன்படி, குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது ஆணையம், மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கள் அடையாள அட்டைகளை உரிமை கோராமல் விட்டுச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுவரை 220,000 ஐடிகள் வழங்கப்படாமல் காத்திருக்கும் நிலையில், மக்களுக்கு அடையாள அட்டைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 220,000 சிவில் அடையாள அட்டைகள் அதிகாரசபையின் அமைப்புகளில் சேகரிக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் வகையில், இந்த உரிமை கோரப்படாத கார்டுகளில் சுமார் 70 சதவிகிதம் ரெசிடென்ஸி பிரிவுகள் 18 மற்றும் 22ன் கீழ் வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமானவை என கூறப்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு முக்கியப் பங்காற்றியது “மை ஐடென்டிட்டி” அப்ளிகேஷனைப் பயன்படுத்தாததுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் முதினின் கூற்றுப்படி, சேகரிக்கப்படாத இந்த அட்டைகள் முக்கியமான சேமிப்பு இடத்தை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல், புதிய அடையாள அட்டைகளை செயலாக்குவதற்கும் வழங்குவதற்கும் இடையூறாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. எனவே, தனிநபர்கள் தங்கள் ஐடிகளை பெற்றுக் கொள்வதை மூன்று மாதத்திற்கு மேல் தாமதித்தால் 20 தினார் அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ஆய்வு முடிவடைந்தவுடன், இந்த அட்டைகளானது மேலும் ஆய்வுக்காக அதிகாரசபையின் இயக்குநர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். சேமிப்பக தேதியிலிருந்து ஆறு மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, சேகரிக்கப்படாத அட்டைகள் அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காடுகள் நிராகரிக்கப்பட்டால், தனிநபர்கள் புதிய கார்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், புதிய கார்டுக்கான கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவற்றை சேர்ந்து செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அடையாள அட்டை வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக, மே 23க்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் செயலாக்கத்தை ஆணையம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முயற்சியானது, அடுத்தடுத்த சமர்ப்பிப்புகளுக்கான விரைவான வழங்கல் செயல்முறையை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!