அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடரும் சைபர் தாக்குதல்!! – பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த செக்யூரிட்டி கவுன்சில்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் நேஷனல் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சொத்துக்களை குறிவைக்கும் சைபர் தாக்குதல்களில் இருந்து மிகக் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு UAE சைபர் செக்யூரிட்டி கவுன்சில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுவாக கணினி மற்றும் அதிலுள்ள மென்பொருள் தரவுகளை சேதப்படுத்தும் வைரஸ் போன்ற தீமையான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக திறமையான அதிகாரிகளுடன் இணைந்து சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் அமைப்பை (cyber emergency response system) செயல்படுத்துமாறு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி பாலிசிகளை செயல்படுத்துதல் மற்றும் நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் சந்தேகத்திற்கிடமான மின்னணு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதுடன், முக்கிய துறைகளில் நடைபெறும் பல்வேறு சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதன் அவசியத்தையும் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசானது பாதுகாப்பான டிஜிட்டல் மாற்றம் மற்றும் தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை பாதுகாப்பதற்கான சிறந்த தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!