அமீரக செய்திகள்

UAE : சுகாதார ஊழியர்களை கௌரவிக்க அமீரக விமானப்படையின் வான்வெளி காட்சி..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்காக முன்னின்று எதிர்த்து போராடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களை கௌரவிக்கும் பொருட்டு ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் பொது கட்டளை குழுவின் மூலம் ஐக்கிய அரபு அமீரக விமானப்படைகளின் ஏரோபாட்டிக்ஸ் டிஸ்ப்ளே குழு, அல் ஃபுர்சான் (Aerobatics Display Team, Al Fursan) வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மேலே உயர பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் நன்றியுணர்வின் செய்தியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அவர் கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த அயராது உழைத்து வரும் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள், துணைமருத்துவர்கள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரின் முக்கிய பங்கை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வான்வெளி காட்சிகள் நடைபெறும் இடங்கள்

அபுதாபி

ஞாயிற்றுக்கிழமை

  • அல் ரஹ்பா மருத்துவமனை (Al Rahba Hospital)
  • ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி (Sheikh Khalifa Medical City)
  • சயீத் மிலிட்டரி மருத்துவமனை (Zayed Military Hospital)
  • எமிரேட்ஸ் ஹியூமனிடேரியன் சிட்டி (Emirates Humanitarian City)
  • ஷேக் ஷக்பூட் மெடிக்கல் சிட்டி (Sheikh Shakhbout Medical City)
  • அல் அய்னில் உள்ள அல் அய்ன் மருத்துவமனை (Al Ain Hospital)

நேரம் – மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை

திங்கள்கிழமை

  • மதீனத் சையதில் உள்ள அல் தஃப்ரா மருத்துவமனை (Al Dhafra Hospital)

நேரம் – மாலை 5.30 மணி முதல்

செவ்வாய்க்கிழமை
துபாய்
  • குவைத் மருத்துவமனை (Kuwait Hospital)
ஷார்ஜாஹ்
  • அல் குவைத் மருத்துவமனை (Al Kuwait Hospital)
அஜ்மான்
  • ஷேக் கலீஃபா பொது மருத்துவமனை (Sheikh Khalifa General Hospital)
உம் அல் குவைன்
  • கள மருத்துவமனை (Field Hospital)
ராஸ் அல் கைமா
  • கள மருத்துவமனை (Field Hospital)
  • இப்ராஹிம் பின் ஹமாத் ஒபைதுல்லா மருத்துவமனை (Ibrahim Bin Hamad Obaidullah Hospital)
கொர்ஃபக்கான்
  • கொர்ஃபக்கான் மருத்துவமனை (Khorfakkan Hospital)
ஃபுஜைரா
  • கள மருத்துவமனை (Field Hospital)
  • மஸாஃபி மருத்துவமனை ( Masafi Hospital)

நேரம் – மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை

கொரோனாவை எதிர்கொள்வதில் முன்னின்று போராடும் மருத்துவக்குழுக்களின் அயராத முயற்சிகள் மற்றும் முக்கிய பங்கிற்காக அவர்களை பாராட்டும் விதமாக நடைபெற இருக்கும் இந்த நிகழ்வை பொதுமக்கள் அமீரகத்தின் ஆயுதப்படைகளுடன் இணைந்து இந்த தருணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அல் ஃபுர்சான் குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!