அமீரக செய்திகள்

UAE Careem பகிர்ந்து கொண்ட அதன் சுவாரசியமான ரைடுகள் மற்றும் ஆர்டர்கள்! நிறுவனத்தின் CEO நெகிழ்ச்சி !

கடந்த ஆண்டு துபாயின் மிக பிரபலமான UAE Careem தளத்தில் டாக்ஸியை முன்பதிவு செய்து பயணித்த ஒருவர் விட்டுச்சென்ற 900,000 திர்ஹம் ரொக்கத்தை நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைத்த டாக்ஸி ஓட்டுனர் முகம்மது ஓர்ஃபான் முகமது ரஃபீக்கை காவல்துறை கௌரவித்துள்ளது. பலசேவைகளை வழங்கும் தளமான Careem சமீபத்தில், 2022 முதல் நிகழ்ந்த அதன் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளது.

Careem வெளியிட்டுள்ள தகவலின்படி, அதன் தளத்தில் புக்கிங் செய்யப்பட்ட பிரபலமான உணவகங்கள் பட்டியலில் சவூதி அரேபியாவில் உள்ள Al Baik மற்றும் UAE மற்றும் ஜோர்டானில் உள்ள McDonalds இடம் பிடித்துள்ளன. அதுபோல, அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் சிக்கன் மெக்நகெட்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவு ஆர்டர்களிள் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், Careem Quick மூலம் பெரும்பாலான ஆண் வாடிக்கையாளர்கள் நிறைய குளிர்பானங்கள் மற்றும் குறைந்த அளவில் காய்கறிகளை ஆர்டர் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், பெண் வாடிக்கையாளர்கள் அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளை ஆர்டர் செய்துள்ளனர். மேலும் Quick தளத்தின் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஆர்டர்களில் பிரபலமான ஒன்று ஒரு குளிர்பான பிராண்ட், அல் ஐன் தண்ணீர் மற்றும் வாழைப்பழங்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், வாடிக்கையாளர் ஒருவர் 216 குளிர்பான பாட்டில்களை 2,100 திர்ஹம்முக்கு ஆர்டர் செய்துள்ளார். அவை 18 டெலிவரி நபர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது வியப்பிற்குரியதாகும்.

அதுபோல, சென்ற 2022 ஆம் ஆண்டு முழுவதும், உலகம் முழுவதிலும் உள்ள கரீம் ஓட்டுனர்கள் 97 மில்லியன் ரைடுகளை முடித்து சுமார் 1.2 பில்லியன் கிலோமீட்டர்களை கடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் சவுதி அரேபியாவில் மட்டும் அதிக ரைடுகள் பதிவு செய்யப்பட்டு 26.8 மில்லியன் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து Careem இன் CEO மற்றும் இணை நிறுவனர் Mudassir Sheikha அவர்கள் கூறுகையில், கரீம் நிறுவனத்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருந்ததாகக் கூறியுள்ளார். நிறுவனத்தின் பத்தாவது ஆண்டினைக் கொண்டாடியுள்ள நிலையில் 1 பில்லியன் ரைடுகள் என்ற மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் FIFA உலகக்கோப்பை கால்பந்து கத்தார் மற்றும் எக்ஸ்போ 2022 துபாய் போன்றவற்றின் வெற்றிக்கு ஆதரவளித்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, கல்வி, மனிதாபிமான உதவி மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்காக $778,162 திரட்டியதை பாக்கியமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!