அமீரக செய்திகள்

அமீரகத்தில் வாட்ஸ்அப் மூலம் அணுகக் கூடிய 10 அரசாங்க சேவைகள்.. பொது பார்க்கிங் முதல் புகாரளிப்பது வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கத் துறைகளின் WhatsApp வணிகக் கணக்குகள் பயண்பாட்டில் உள்ளன.  இந்தக் கணக்குகள் ஒரு மெய்நிகர் உதவியாளராலும் அல்லது சில சமயங்களில் பயனருக்குப் பதிலளிக்கும் ஒரு பிரதிநிதியாலும் கையாளப்பட்டு வருகின்றன.

எனவே, நீங்கள் வாட்ஸ்அப் மூலம் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்துதல், பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், Dewa மற்றும் நீர் பயன்பாட்டு பில்களைச் சரிபார்த்தல் உள்ளிட்ட பத்து அரசாங்க சேவைகளை WhatsApp மூலமாக அணுகலாம். அதன்படி, அமீரகத்தில் WhatsApp இல் கிடைக்கக் கூடிய அரசாங்க சேவைகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. RTA டிரைவிங் டெஸ்ட்டை பதிவு செய்தல்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) சமீபத்திய அறிவிப்பின்படி, வாட்ஸ்அப் மூலம் உங்கள் ஓட்டுநர் சோதனைக்கான சந்திப்பை எளிதாக பதிவு செய்யலாம் அல்லது மாற்றியமைக்கலாம். அதற்கு முன்பதிவு செய்ய, வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் 971 58 8009090 என்ற எண்ணைச் சேமித்து, ‘Mahboub’ சாட்பாட் மூலம் உரையாடலை தொடங்கலாம்.

2. துபாயில் பொது பார்க்கிங்கிற்கு பணம் செலுத்துதல்

துபாயில், நீங்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் உங்கள் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தலாம். mParking ஐப் பயன்படுத்தும் போது நீங்கள் செலுத்தும் கூடுதல் 30 fils சேவைக் கட்டணத்தில் உங்கள் பணத்தைச் சேமிக்கவும் முடியும். அதற்கு, உங்கள் மொபைலில் 971 58 8009090 என்ற எண்ணைச் சேமித்து, பிளேட் நம்பர் மண்டல எண் மற்றும் பாரக்கிங் காலத்தை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

3. நாட்டின் தொழிலாளர் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்:

நிறுவனங்கள், ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் 6005 90000 என்ற வாட்ஸ்அப் எண் மூலம், MOHRE இன் ஆன்லைன் சேவைகளை அணுகலாம். இந்த எண்ணில் அமீரகத்தின் தொழிலாளர் சட்டத்துடன் தொடர்புடைய ஏதேனும் சந்தேகங்களை கேட்கலாம் அல்லது விண்ணப்பத்தைப் பின்தொடரலாம்.

மேலும், நீங்கள் தொழிலாளர் புகாரைப் பதிவு செய்ய விரும்பினால் அல்லது UAE யில் ஒரு தொழிலாளியாக உங்கள் உரிமைகளைப் பற்றி விசாரிக்க விரும்பினால், தொழிலாளர் தொடர்பான புகார்கள் அல்லது சட்ட ஆலோசனைகளுக்கு 800 84ஐத் தொடர்பு கொள்ள வேண்டும். 24×7 கிடைக்கும் இந்த சேவை,  அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது.

4. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல்:

அமீரகத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறப்பை பதிவு செய்வது அவசியம். நீங்கள் வாட்ஸ்அப் மூலம் சில நிமிடங்களில் உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பெறும் விருப்பம் உள்ளது. ஆகவே, பெற்றோர்கள் அமைச்சகத்தின் பிரத்யேக WhatsApp எண்: 971 42301221 மூலம் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்.

இருப்பினும், இந்தச் சேவையைப் பயன்படுத்த, MOHAP ஆல் நிர்வகிக்கப்படும் பொது மருத்துவமனையில் குழந்தை சமீபத்தில் பிறந்திருக்க வேண்டும், மேலும் குழந்தையின் ‘Qaid’ எண்ணும் உங்களுக்குத் தேவைப்படும். நீங்கள் விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 65 திர்ஹம் ஆகும்.

5. DEWA பில்களைச் சரிபார்த்தல்:

துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dewa) 2019 இல் வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு பதிலளிக்கும். Dewaஇன் வாட்ஸ்அப் சேவையானது AI சாட்போட் மூலம் இயக்கப்படுவதால், 24×7 நேரமும் அணுகலாம்.

6. அல் அமீன் சேவை மூலம் ஒரு குற்றத்தைப் புகாரளித்தல்:

நீங்கள் நாட்டில் ஏதேனும் சட்டவிரோத செயலை கண்டிருந்தால் அல்லது குற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், துபாய் காவல்துறையின் அல் அமீன் சேவை மூலம் புகாரளிக்கலாம். வாட்ஸ்அப்பில் – 97154 800 4444 என்ற எண்ணைச் சேமிப்பதன் மூலமாகவோ, அவர்களின் கட்டணமில்லா எண் – 800 4444 – அல்லது @alamenservice என்ற சமூக ஊடக பக்கத்தின் மூலமாகவோ அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

2003 இல் தொடங்கப்பட்ட்இந்த அல் அமீன் சேவை, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ரகசிய தகவல்தொடர்பு சேனல்களை வழங்குகிறது. மேலும் இந்த வாட்ஸ்அப் சேவை 24 மணி நேரமும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

7. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைப் புகாரளித்தல்:

குடும்ப துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், DFWAC அறக்கட்டளையை (Dubai Foundation for Women and Children) 971800111 என்ற WhatsApp எண்ணில் தொடர்பு கொண்டு மனநல, சமூக அல்லது சட்ட ஆலோசனைகளையும் பெறலாம். வாட்ஸ்அப் சேவையைத் தவிர 800111 என்ற ஹெல்ப்லைன் எண்ணிலும் DFWAC ஐ 24×7 தொடர்பு கொள்ளலாம்.

8. மருத்துவ சந்திப்பை பதிவு செய்தல்:

அபுதாபியில் குடியிருப்பவர்கள் அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (seha), சுகாதார வசதிகள், கிளினிக்குகள் அல்லது மருத்துவமனைகளில் மருத்துவ சந்திப்பை பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் வழியாக, புதிய மற்றும் பின்தொடரும் மருத்துவ அப்பாயின்ட்மென்ட்களை முன்பதிவுகளை செய்யலாம் மற்றும் நிர்வகிக்கலாம், சந்திப்புகளை ரத்து செய்யலாம் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து சந்திப்புகளையும் காண்பிக்கலாம்.

9. வதந்திகள் மற்றும் தவறான செய்திகளைப் புகாரளித்தல்:

பயனர்கள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி அல்லது தவறான செய்திகளைக் கண்டால், WhatsApp இல் துபாய் நகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம், மேலும் அதிகாரத்தில் உள்ள ஒரு சிறப்புக் குழு உங்களுக்கான தகவலைச் சரிபார்க்கும்.

புகாரளிப்பதற்கான படிகள்:

  1. வாட்ஸ்அப்பில் துபாய் முனிசிபாலிட்டி எண்ணைச் சேமித்து, மெய்நிகர் உதவியாளருடன் உரையாடலைத் தொடங்கவும்.
  2. பிறகு உங்களுக்கு மெனு பட்டியல் வழங்கப்படும். அதில் ‘DM Rumours’ என்ற விருப்பத்திற்கு ‘6’ ஐத் தேர்ந்தெடுக்கவும்,
  3. அடுத்து,  ‘Register Rumour’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைனில் பரவும் வதந்தியின் உரையை அனுப்பவும், துபாய் முனிசிபாலிட்டியில் உள்ள குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்..

இது தவிர, வீட்டுக் கட்டணக் கால்குலேட்டர், துபாய் சஃபாரி பார்க் டிக்கெட்டுகளைப் பற்றி விசாரித்து ஒரு சம்பவத்தைப் புகாரளித்தல் போன்ற பல துபாய் நகராட்சி சேவைகளையும் வாட்ஸ்அப்பில்  நீங்கள் அணுகலாம்.

10. அவசரநிலையை எச்சரிக்கவும் அல்லது தொழில்நுட்ப உதவியை பெறவும்:

அபுதாபியின் முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையால் (DMT) தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை, பயனர்கள் ஒரு சிக்கலை தெரிவிக்கவும் அவர்களின் கோரிக்கைகளின் நிலையை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. உதாரணமாக, விரிசல் அடைந்த சாலைகள், மாசுபாடு, கழிவுகளை சட்டவிரோதமாக அகற்றுதல் அல்லது குழிகளை அகற்றுதல் போன்றவற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இந்த சேவை அனுமதிக்கிறது.

அதுமட்டுமில்லாமல், கூகுள் மேப்ஸிலிருந்து இணைப்பை முன்னனுப்புவதன் மூலம், அவற்றைப் புகாரளிக்கவும் ஆவணப்படுத்தவும் படங்களை அனுப்பலாம் அல்லது அவசரநிலையின் இருப்பிடத்தைப் பகிரலாம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான துறையின் சேவைகள் தொடர்பான அவசரத் தேவைகளுக்கு நீங்கள் தொழில்நுட்ப உதவியைக் கோரலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!