அமீரக செய்திகள்

துபாய்: ஞாயிறு முதல் மூடப்படும் அல் ஷிண்டகா டனலின் தேரா- பர்துபாய் பாதை… மாற்றுவழி என்ன..??

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு மாதங்களுக்கு தேராவிலிருந்து பர் துபாய் வரை செல்லும் அல் ஷிண்டகா சுரங்கப்பாதையை (Al shindagha) tunnel) தற்காலிகமாக மூடுவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மூடல் ஜனவரி 16, ஞாயிற்றுக்கிழமை மக்கள் போக்குவரத்திற்கு திறக்கப்படும் புதிய பாலமான இன்ஃபினிட்டி பிரிட்ஜ் திறக்கப்படுவதோடு ஒத்துப்போகிறது.

அல் ஷிண்டகா சுரங்கப்பாதையுடன் இன்ஃபினிட்டி பாலத்திற்கும் புதிய பாலங்களுக்கும் இடையிலான இணைப்பை முடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைக்காக இந்த சுரங்கப்பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதை மூடப்படுவதால் போக்குவரத்தானது பொதுவாக தேராவில் இருந்து பர் துபாய் வரை மற்றும் பர் துபாயில் இருந்து தேரா வரை இன்ஃபினிட்டி பிரிட்ஜில் ஒவ்வொரு மணி நேரமும் 24,000 வாகனங்கள் இரு திசைகளிலும் செல்லும் வகையில் இருக்கும்.

எனவே அப்பகுதியில் போக்குவரத்து சீராக இருக்க, RTA ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் அபுபக்கர் அல் சித்திக் ஸ்ட்ரீட் ஜங்க்‌ஷன், தேரா பாம் ஐலேண்ட் ஸ்லோப், உமர் இபின் அல் கத்தாப் ஜங்க்‌ஷன், அல் முசல்லா ஜங்க்‌ஷன் மற்றும் கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள போக்குவரத்தை பர் துபாய்க்கு உள்ள புதிதாக திறக்கப்படும் இன்ஃபினிட்டி பிரிட்ஜின் நுழைவாயிலுக்கு திசை திருப்புகிறது.

>> தேரா ஐலேண்டில் இருந்து அல் ஷிந்தகா டனல் வழியாக பர் துபாய்க்கு செல்லும் போக்குவரத்து, கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலம் வழியாக இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு சென்று பின் பர் துபாய் மற்றும் ஜுமேராவை நோக்கி செல்லும். 

>> அபுபக்கர் அல் சித்திக் ஸ்ட்ரீட்டில் இருந்து போக்குவரத்தானது அல் கலீஜ் ஸ்ட்ரீட் ஜங்க்‌ஷன் வழியாக இடதுபுறம் திரும்பி, கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலம் வழியாக இன்ஃபினிட்டி பிரிட்ஜ் வரை சென்று பின்னர் பர் துபாய் மற்றும் ஜுமேரா நோக்கி போக்குவரத்து தொடரும்

>> அல் மம்ஸாரிலிருந்து போக்குவரத்து அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் தொடர்ந்து, அபுபக்கர் அல் சித்திக் ஜங்க்‌ஷனைக் கடந்து, கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலம் வழியாகஇன்ஃபினிட்டி பிரிட்ஜ் வரை சென்று பின்னர் பர் துபாய் மற்றும் ஜுமேரா நோக்கி போக்குவரத்து தொடரும். 

>> உமர் பின் அல் கத்தாப் ஜங்க்‌ஷனில் இருந்து கார்னிச் ஸ்ட்ரீட் வழியாக இன்ஃபினிட்டி பிரிட்ஜ் வரை புதிய மேம்பாலம் நோக்கிப் பின்னர் பர் துபாய் மற்றும் ஜுமேரா நோக்கி போக்குவரத்து தொடரும்.

>> அல் முசல்லா ஜங்க்‌ஷனில் இருந்து போக்குவரத்து உமர் பின் அல் கத்தாப் ஜங்க்‌ஷனுக்கு சென்று, பின்னர் இடதுபுறம் இன்ஃபினிட்டி பிரிட்ஜை நோக்கிச் செல்லலாம் அல்லது அல் முசல்லா ஸ்ட்ரீட்டில் நேராகத் தொடர்ந்து, பின்னர் JN13 மேற்பரப்பிலிருந்து இன்பினிட்டி பிரிட்ஜ் நோக்கி கார்னிச் ஸ்ட்ரீட்டில் செல்லலாம்.

>> தேரா ஐலேண்ட் மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து கார்னிச் ஸ்ட்ரீட்டில் உள்ள புதிய மேம்பாலத்தின் கீழ் மேற்பரப்பு சாலை வழியாக கார்னிச் ஸ்ட்ரீட் மற்றும் இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு செல்லும்.

வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக பயணிக்க வேக வரம்புகள் மற்றும் திசை அடையாளங்களை (sign direction) கடைபிடிக்குமாறு RTA அழைப்பு விடுத்துள்ளது.

வீடியோ: துபாயில் மற்றுமொரு புதிய அடையாளமான ‘Infinity bridge’.. புகைப்படங்களை பகிர்ந்த துபாய் மன்னர்…

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!