அமீரக செய்திகள்

துபாய் ஷார்ஜா இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சாலையை மேம்படுத்திய RTA ..!! நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!!

துபாய் மிர்திஃப் சிட்டி சென்டருக்கு (Mirdif City Centre) அருகிலுள்ள அல் ரீபாட் ( Al Rebat) மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலைகள் (Sheikh Mohammed Bin Zayed Roads) சந்திக்கும் இடத்தில் புதிதாக அகலப்படுத்தப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் நாளை (நவம்பர் 20) முதல் திறக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

அல் ரீபாட் (Al Rebat) மற்றும் திரிப்போலி வீதிகளில் (Tripoli Streets) ஒரு பாதை கூடுதலாக சேர்க்கப்பட்டு, அப்பகுதியில் தற்போதுள்ள பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாடுகள், துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று RTA தெரிவித்துள்ளது.

ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையுடன் (Sheikh Zayed Bin Hamdan Al Nahyan Road) இணைக்கும் ஃப்ளைஓவர், எமிரேட்ஸ் சாலை (Emirates Road) மற்றும் நவுக்சோட் தெருவிற்கு (Nouakchott Street) இடையேயான பாலங்கள், மற்றும் அல்ஜீரியா தெரு சந்திப்பில் ஒரு சுரங்கப்பாதை (tunnel at the intersection on Algeria Street) உட்பட திரிப்போலி தெருவில் உள்ள அனைத்து சந்திப்புகளையும் RTA ஏற்கனவே மேம்படுத்தியிருந்தது.

மேலும், திரிப்போலி வீதி மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலை சந்திக்கும் இடத்திலிருந்து எமிரேட்ஸ் சாலை வரை திறந்திருக்கும் ஒரு புதிய சாலையின் கட்டுமானத்தையும் RTA நிறைவு செய்துள்ளது. 5.3 கி.மீ நீளமுள்ள இந்த சாலை, ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!