அமீரக செய்திகள்

இரு வருடங்களுக்கு பின் இஃப்தார் டென்ட்டிற்கு அமீரகத்தில் அனுமதி..!! கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்ட அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருட ரமலானுக்கு இஃப்தார் டென்ட்களை (iftar tent) அமைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்காக பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் அதிகாரிகள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) குழு ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் டென்ட்களை அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று கூறியுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள அதிகாரிகள் டென்ட்களின் இருப்பிடம் மற்றும் அதிகபட்ச கொள்ளளவை தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் NCEMA கூறியுள்ளது.

டென்ட்களில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை பயன்படுத்தும் மேஜை துணிகளையே (Single-use table cloths) பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரக அரசின் இந்த அறிவிப்பானது இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த இரு வருடங்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக ரமலான் மாத கூடாரத்திற்கு தடை விதிக்கப்பட்டு அவரவர் தங்குமிடங்களிலேயே இஃப்தார் மேற்கொண்டு வந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!