அமீரக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கும் 10 ஆண்டு கோல்டன் விசா..!! அவர்களின் குடும்பத்திற்கும் வழங்கப்படும் என அமீரக அரசு அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிட்ட துறையில் சிறந்து வழங்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 10 வருடத்திற்கான கோல்டன் விசாவானது தற்பொழுது மேல்நிலைப்பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் என அமீரக அரசு அறிவித்துள்ளது.

இதுபோன்ற சிறந்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறமையானவர்களுக்கு ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்குவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்கும் திறமையானவர்களை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் மேற்கொள்ளும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

கோல்டன் விசா தேவையுள்ள நபர்கள் விண்ணப்பங்களை எமிரேட்ஸ் பள்ளிகள் நிறுவனம் (Emirates Schools Establishment) மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வியில் சிறந்த தரத்தைப் பெற்ற சிறந்த மாணவர்களுக்கு அல்லது பொது இடைநிலை சான்றிதழில் அல்லது பொது அல்லது தனியார் பள்ளிகளிடமிருந்து இது போன்று பெறப்படும் சான்றிதழில் சராசரியாக 95 சதவீதத்தையாவது பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கு 10 ஆண்டு குடியிருப்பு விசா வழங்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்லது அதற்கு வெளியே குறிப்பிட்ட அறிவியல் பிரிவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த சராசரி 3.75 அல்லது அதற்கு மேல் வைத்திருந்தால் இந்த விசாவிற்கான தகுதி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அத்தகைய மாணவர்களின் குடும்பங்களுக்கும் விசாக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!