அமீரக செய்திகள்

துபாய்: இன்னும் சில நாட்களில் மூடப்படவுள்ள மூன்று முக்கிய சுற்றுலா இடங்கள்!!

துபாயின் மிக பிரபலமான அதிகம் விரும்பப்பட்ட பெஸ்டிவல் பார்க், குளோபல் வில்லேஜ் போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கொண்டிருந்த சுற்றுலா இடங்கள், கடந்த வார இறுதியில் அதன் வாயில்களை மூடியது. தற்போது அமீரகத்தில் கொளுத்தும் கோடை காலம் நெருங்கிவரும் நிலையில், மேலும் பல சுற்றுலா இடங்கள் அதன் கதவுகளை மூடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், குடியிருப்பாளர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று புதிய அனுபவங்களை சேகரிப்பதற்கு சில இடங்கள் இன்னும் சில நாட்களுக்கு கூட திறந்திருக்கும். அத்தகைய, இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் முக்கிய மூன்று இடங்களை இங்கே காணலாம்.

மிராக்கிள் கார்டன் (Miracle Garden):

சுமார் 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் இந்த வருடம் கூடுதல் மாதத்திற்கு அதன் செயல்பாடுகளை நீட்டிப்பதாக முன்னதாகவே அறிவித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் ஜூன் 4, 2023 வரை பார்வையாளர்களுக்காக மிராக்கிள் கார்டன் திறந்திருக்கும்.

குளிர்காலத்தில் துபாயை சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் பிரகாசமான வண்ணக் காட்சிகளை வழங்கும் இந்த பூங்காவின் ஏற்பாடுகள் பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க தகுதியான இடங்களில் ஒன்றாகும்.

மேலும் இது பார்வையாளர்களுக்கு தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். எனவே, பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது பூங்கா வாயிலில் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவை அனுமதிக்கும் இந்த பூங்காவில் 12 வயதுக்கு மேல் 75 திர்ஹம் மற்றும் 3 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு 60 திர்ஹம்களும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஹத்தா ரிசார்ட்ஸ் (Hatta Resorts):

மலைப்பாங்கான பகுதியை விரும்புபவர்கள் மற்றும் அதன் பிரம்மாண்டத்தை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள் ஹட்டா ரிசார்ட்ஸைப் பார்வையிட 10 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதாவது எதிர்வரும் மே 15 திங்கட்கிழமையுடன் இந்த வருட சீசன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம் மலை ஏற விரும்புபவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

குறிப்பாக, இங்கு பார்வையாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட மொட்டை மாடி பகுதியில் இருந்து இதனை சுற்றியுள்ள தேசிய பூங்கா மற்றும் அதன் அழகிய காட்சிகளை பார்வையிடலாம். இந்த ஹட்டா ரிசார்ட்ஸில் நவீன மலை ஏறும் டோம்கள், கேரவன்கள் நிறைந்த மலைப்பகுதி பூங்கா மற்றும் பிரத்யேகமாக கட்டப்பட்ட தமானி லாட்ஜ்கள் உட்பட தனித்துவமான தங்கும் வசதிகளையும் இங்கே அனுபவித்து மகிழலாம்.

இதற்கான விலை வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களைப் பொறுத்து மாறுபடும். எனவே இங்கு செல்ல விரும்புபவர்கள் கட்டண விவரத்தை ஆன்லைனில் சரிபார்த்து கொள்ளலாம்.

தி ரைப் மார்க்கெட் (The Ripe Market):

விவசாயிகளின் சந்தையான இங்கு உள்நாட்டில் இருந்து பெறப்பட்ட, புதிய மற்றும் கரிம பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் பிற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கலாம். அகாடமி பார்க்கில் உள்ள இந்த ரைப் மார்க்கெட் மே 14, 2023 வரை திறந்திருக்கும்.

மேலும், உணவுப் பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவருக்கும் ஏதுவான வகையில் இந்த வார இறுதிச் சந்தையானது பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது. அதாவது புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் முதல் வேகவைத்த பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜாம்கள் மற்றும் இயற்கை தோல் பராமரிப்பு பொருட்கள் வரை அனைத்தையும் வழங்கும் பரந்த அளவிலான ஸ்டால்களை இங்கே சுற்றிப் பார்க்கலாம்.

சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் இந்த மார்க்கெட்டில் நுழைவுக் கட்டணமாக 5 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!