அமீரக செய்திகள்

துபாய்: இந்திய தொழிலதிபரும் Max, Splash, Babyshop உள்ளிட்ட லேண்ட்மார்க் குழுமத்தின் நிறுவனருமான ஜக்தியானி மரணம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், துபாயைத் தளமாகக் கொண்ட Landmark Group இன் நிறுவனரும் தலைவருமான மிக்கி முகேஷ் ஜக்தியானி இன்று (மே 26) மரணமடைந்துள்ளார். தற்பொழுது அவருக்கு வயது 70 ஆகும்.

1973 இல் பஹ்ரைனில் குழந்தைகளுக்கான விற்பனை கடை மூலம் வணிக உலகில் நுழைந்த ஜக்தியானி அவர்கள், தற்பொழுது வளைகுடா நாடுகள் மட்டுமல்லாது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தனது நிறுவனங்களை நிறுவியதன் மூலம் மாபெரும் வணிக பேரரசாக உருவெடுத்தார்.

அவரின் ஆரம்ப காலத்தில் பஹ்ரைனில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த கடையானது பின்னர் பேபிஷாப் (Babyshop), ஸ்பிளாஸ் (Splash), ஹோம் சென்டர் (Home center), மேக்ஸ் (Max), சென்டர்பாயின்ட் (Centerpoint), ஷூமார்ட் (Shoe Mart), இமேக்ஸ் (E-max), மேக்ஸ் ஹோட்டல் (Max Hotel) மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 50 க்கும் மேற்பட்ட செல்வாக்கு மிக்க பிராண்டுகளுடன் இன்று மிகப்பெரிய பில்லினியராக அறியப்பட்டார். தற்போது, அவரது நிகர சொத்து மதிப்பு $5.2 பில்லியன் ஆகும்.

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டம் உள்ளிட்ட 24 நாடுகளில் சுமார் 2,200 ஸ்டோர்களைக் கொண்டுள்ள லேண்ட்மார்க் குழுமத்தில், அவரது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகிய அனைவரும் குறிப்பிடத்தக்க பதவிகளில் பொறுப்பேற்று வருகின்றனர். குறிப்பாக, அவரது மனைவி ரேணுகா ஜக்தியானி என்பவர் தற்போது துபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் தலைவர் மற்றும் CEO ஆக பதவி வகிக்கிறார்.

மத்திய கிழக்கில் அமைப்பு ரீதியாக முக்கியமான வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களில் லேண்ட்மார்க் நிறுவனமும் ஒன்றாகும். லேண்ட்மார்க் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 48,000 என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!