வளைகுடா செய்திகள்

ஓமானில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீட்டிப்பு..!!

ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் எந்தவொரு அபராதமும் கட்டணமும் இன்றி ஓமான் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று ஓமான் தொழிலாளர் அமைச்சகத்தின் சார்பாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த சலுகை காலம் ஜூன் 30 வரை முடியும் என கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் மூன்று மாதங்கள் நீட்டுக்கப்பட்டு இப்போது ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15 அன்று முதல் அமலுக்கு வந்த இந்த திட்டம் டிசம்பர் 31,2020 அன்று காலாவதியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் இது மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டது. பின் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான அரசு அறிவித்த இந்த சிறப்புத் திட்டம் ஆகஸ்ட் 31, 2021 வரை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட செய்தியில், தற்போதைய தொற்றுநோய் காரணமாக, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் இலவசமாக வெளியேறுவதற்கு பதிவுசெய்யும் இறுதி தேதி ஆகஸ்ட் 31 ஆகும் என்று தெரிவித்துள்ளது.

பணி அனுமதி காலாவதியானவர்கள் அல்லது சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் என பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் இந்த காலகட்டத்தில் புறப்படுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகை காலத்தில் ஓமானில் வாழும் அனைத்து ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களும் எந்தவொரு அபராதம் அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளும் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை பதிவு செய்யாத அனைவரும் முன் வந்து ஆன்லைனில் பதிவு செய்து இத்திட்டத்தைப் பயன்படுத்துமாறு தொழிலாளர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து ஆவணமற்ற தொழிலாளர்கள் மற்றும் ஓவர்ஸ்டேயில் தங்கியிருக்கும் விசிட்டர்கள் அமைச்சின் வலைத்தளத்தில் (www.mol.gov.om) அல்லது சனத் அலுவலகங்கள் (sanad office) மூலம் பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!