அமீரக செய்திகள்

UAE: ஸ்கூபா டைவிங், ஜெட் ஸ்கீயிங், யாட்ச் ரைடு போன்ற 6 சாகசங்களை 30 சதவீத தள்ளுபடியில் அனுபவிக்கலாம்.. இந்த சலுகை கோடைகாலம் மட்டுமே!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கும் நிலையில், சிறந்த தள்ளுபடி கட்டணத்தில் சில வெளிப்புற சாகசங்கள் மற்றும் விறுவிறுப்பான நடவடிக்கைகளை அனுபவிக்க விரும்பினால், இதுதான் உங்களுக்கு சரியான நேரம். ஏனெனில் கோடையை முன்னிட்டு அமீரகத்தில் ஸ்கூபா டைவிங், ஜெட் ஸ்கீயிங், ஆஃப்-ரோட் போன்ற வெளிப்புற சாகச அனுபவங்களை கிட்டத்தட்ட 30 சதவீதம் தள்ளுபடி விலையில் இப்போது நீங்கள் அனுபவிக்கலாம்.

குறிப்பாக, உட்புற நடவடிக்கைகளை விட வெளிப்புற நடவடிக்கைகள் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து இதற்கான விலைகள் அதிகரிக்கும் என்றும் சுற்றுலா நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, தள்ளுபடி கட்டணத்தில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய முக்கியமான 6 வெளிப்புற சாகச நடவடிக்கைகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

1. ஸ்கூபா டைவிங் (scuba Diving):

நீங்கள் நீருக்கடியில் உங்களை மூழ்கடித்துக் கொண்டு கடல் வாழ்க்கையை அனுபவிக்க ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்க அமீரகத்தில் பல ஸ்கூபா டைவிங் ஆபரேட்டர்கள் உள்ளனர்.

இதன் மூலம் கடலுக்கடியில் இருக்கும் வசீகரமான பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்வியல் போன்றவற்றை ஆராயும் வாய்ப்பு கிடைப்பதுடன் மறக்க முடியாத சாகச அனுபவமும் கிடைக்கும். இந்த டைவிங் செயல்பாட்டிற்கான கட்டணம் பொதுவாக 400 திர்ஹம்களில் தொடங்குகிறது, அதே நேரத்தில் பல டைவிங் ஆபரேட்டர்கள் கோடையில் கட்டணமாக 299 திர்ஹம் மட்டுமே வசூலிக்கின்றன எனவும் கூறப்படுகின்றது.

2. படகு சவாரி (Yacht Rides):

இந்த கோடைகாலத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் விலை குறைவாக ஒரு பிரைவேட் படகு வாடகைக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. நீங்கள் இதில் பயணம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு ஒரு அமைதியான மற்றும் ஆடம்பரமான சூழலை வழங்கும். அதுமட்டுமின்றி, துபாய் கடற்கரையின் கவர்ச்சியான காட்சிகள் என காண்போருக்கு மறக்க முடியாத அழகிய தருணத்தை இதில் நீங்கள் அனுபவிக்கலாம்.

பொதுவாக குளிர்கால விலைகள் ஒரு மணி நேரத்திற்கு 300 திர்ஹம்களில் தொடங்கி 2,500 திர்ஹம் வரை இருக்கும். ஆனால், தற்போதைய விலைகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது மற்றும் செப்டம்பர் இறுதி வரை இந்த சலுகை நீடிக்கும் என கூறப்படுகிறது.

3. தோ க்ரூஸ் அனுபவம் (Dhow Cruise experience)

துபாயின் தனித்துவமான ஈர்ப்புகளின் வரிசையில் தோ க்ரூஸ் பயணமும் ஒன்றாகும். துபாயில் நீங்கள் ஒரு பாரம்பரிய அரேபிய மர படகில் நீர் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பை இது உங்களுக்கு வழங்கும்.

அழகான துபாய் ஸ்கைலைன் அல்லது பழைய துபாய் க்ரீக்கினை சுவையான உணவுடன் ஒரு தோவ் படகில் நீங்கள் அனுபவிக்கலாம். கோடை காலத்தை முன்னிட்டு கட்டணத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

4. ஜெட் நீர்ச்சறுக்கு (Jet skiing):

நீங்கள் துடிப்பான ஒரு நீர் சாகசத்தை அனுபவிக்கும் நபராக இருந்தால், உங்களுக்கான வாய்ப்பை ஜெட் ஸ்கீயிங் வழங்குகிறது. நீரின் மேற்பரப்பில் வேகமாக அங்கும் இங்கும் சறுக்கிக் கொண்டு செல்லும் அனுபவம் உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.

இந்த சாகச ரைடுக்கு 30 நிமிடங்களுக்கு 60 திர்ஹம்கள் வரை பொதுவாக வசூலிக்கப்படுகின்றன. இந்த சாகச அனுபவத்தை நீங்கள் அமீரகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுபவிக்க முடியும். மேலும், இதில் கிட்டத்தட்ட 30 சதவீத தள்ளுபடியைப் பயன்படுத்த விரும்பினால் இந்த மாத இறுதிக்குள் பயண்படுத்திக் கொள்ளலாம்.

5. பாலைவன ரைடுகள் (Desert Safari):

பாலைவனத்தில் தாறுமாறான சவாரி செல்வதன் மூலம் விறுவிறுப்பான சாகச பயணத்தை அனுபவிக்கலாம். பாலைவன மணலில் குதித்து செல்லும் வாகனங்களில் பயணிக்கும் போது, உங்களுக்கு ஒரு உற்சாகமான அனுபவம் கிடைக்கும் மேலும் அங்கிருக்கும் தங்க குன்றுகளையும் (golden dunes) பார்வையிடலாம்.

இந்த சாகச ரைடுக்கான விலை டூர் ஆபரேட்டர்களை பொறுத்து ஒரு மணி நேரத்திற்கு 50 திர்ஹம்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், தற்போது பல இடங்கள் அவற்றின் வழக்கமான விலையில் 20-25 சதவீத தள்ளுபடியை வழங்குகின்றன.

6. ஆழ்கடல் மீன்பிடித்தல்:

அமீரகத்தில் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான ஆழ்கடல் மீன்பிடி பயணத்தை அனுபவிக்க விரும்பினால் இதுவே உங்களுக்கு சரியான தருணம். இந்த விறுவிறுப்பான அனுபவத்திற்கு கோடை விடுமுறையை முன்னிட்டு ஆபரேட்டர்கள் கிட்டத்தட்ட 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறார்கள்.

இந்த சாகச அனுபவத்திற்கான தொடக்க விலை வழக்கமாக 300 திர்ஹம்கள் ஆகும். இருப்பினும் இந்த கோடை விடுமுறையில் அதுவும் 30 சதவீத தள்ளுபடி விலையில் இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனுபவித்து மகிழலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!