அமீரக செய்திகள்

அமீரகத்தில் காலாவதியான விசாவில் தங்கியிருக்கிறீர்களா..?? ஓவர்ஸ்டே அபராதங்களை செலுத்துவதற்கான 5 வழிமுறைகள்..!!

நீங்கள் சுற்றுலா, ரெசிடென்சி அல்லது விசிட் விசா ஆகிய எந்த விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்தாலும், உங்கள் விசா காலாவதி தேதியை ஒரு போதும் மறக்கக் கூடாது. ஏனெனில், உங்கள் விசா காலாவதியான பிறகும் நாட்டில் தங்கினால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு (ICP) ஆகியவற்றிற்கான ஃபெடரல் ஆணையம் விசா காலாவதியான பிறகு தங்கும் ஒவ்வொரு கூடுதல் நாட்களுக்கும் அபராதங்களை நிர்ணயித்துள்ளது.

ஓவர்ஸ்டே அபராதம்:

நீங்கள் காலாவதியான விசாவில் தங்கும் ஒவ்வொரு கூடுதலான நாட்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். ICPயின் படி, ஒரு நாளைக்கு 50 திர்ஹம் வீதம் நாட்டில் கூடுதலாகத் தங்கும் ஒவ்வொரு நாட்களுக்கும் கணக்கிடப்படும்.

எனவே, உங்கள் விசாவின் காலாவதி தேதியை எப்படிக் கண்டறியலாம், மேலும் உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஓவர்ஸ்டே அபராதங்களை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதைப் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

சுற்றுலா அல்லது விசிட் விசாவின் காலாவதி தேதியை எப்படிச் சரிபார்ப்பது?

1. விசா நகல்:

நீங்கள் நேரடியாக ICP அல்லது GDRFA-துபாய் மூலம் நேரடியாக விண்ணப்பித்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் விசா நகலைப் பெறுவீர்கள். இந்த நகலில் விசா எண்ணுக்குப் பிறகு, ‘expiry date’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

2. ஆன்லைன்:

நீங்கள் பின்வரும் ICP அல்லது GDRFA இன் இணையதளங்களிலும் உங்கள் விசா செல்லுபடியை சரிபார்க்கலாம்:

மேற்கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்நுழைந்ததும், உங்கள் பாஸ்போர்ட் எண், விசா எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். நீங்கள் விவரங்களை உள்ளிட்டதும், ‘நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கடைசி தேதி’யுடன் உங்கள் விசாவின் விவரங்கள் கணினி திரையில் தோன்றும்.

ரெசிடென்சி விசா

  1. விசா ஸ்டிக்கர் – நீங்கள் ரெசிடென்சி விசா வைத்திருந்தால், உங்கள் விசா ஸ்டிக்கரைப் பார்த்துச் சரிபார்க்கலாம். நீங்கள் சமீபத்தில் உங்கள் விசாவைப் புதுப்பித்திருந்தால் அல்லது அதற்கு விண்ணப்பித்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் இல்லாமல் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. எமிரேட்ஸ் ஐடி – விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்ப நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், காலாவதி தேதியைச் சரிபார்க்க உங்கள் எமிரேட்ஸ் ஐடி போதுமானது. உங்கள் எமிரேட்ஸ் ஐடியில், காலாவதியாகும் தேதியைப் பார்க்கவும். அதே தேதி தான் உங்கள் விசா காலாவதியாகும் தேதியும் ஆகும்.
  3. ஆன்லைன்: ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ICP இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விசா செல்லுபடியை சரிபார்க்கலாம்: https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity

அபராதத்தை செலுத்துவதற்கான வழிகள்:

  • ICP: https://smartservices.icp.gov.ae/echannels/web/client/guest/index.html#/fines/407/step1?administrativeRegionId=1&withException=false
  • GDRFA: https://gdrfad.gov.ae/en/fines-inquiry-service
  • டைப்பிங் சென்டர்: நீங்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஓவர்ஸ்டே அபராதத்தைச் செலுத்தி நாட்டை விட்டு வெளியேறினாலோ, ICP இல் பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் சென்டரை நீங்கள் பார்வையிடலாம். அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் முழுமையான பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் காணலாம்:https://icp.gov.ae/en/typing-offices/
  • அமர் சென்டர்: துபாயின் GDRFA சார்பாக இமிக்ரேஷன் விண்ணப்பங்களை அமர் மையங்கள் செயலாக்குகின்றன. துபாயில் அமைந்துள்ள அமர் மையங்களின் பட்டியலை பின்வரும்  இணையதளத்தின் மூலம் காணலாம்: https://gdrfad.gov.ae/en/customer-happiness-centers#
  • ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்: நீங்கள் ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தின் மூலமும் விசாவிற்கான அபராதங்களை செலுத்தலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!