அமீரக செய்திகள்

உலகளவில் விற்பனைக்கு வந்த துபாய் எக்ஸ்போ-2020 டிக்கெட்.. விலை எவ்வளவு..?? எப்படி பெறுவது..?? விபரங்கள் உள்ளே..!!

உலகின் மிக முக்கிய நிகழ்வான துபாய் எக்ஸ்போ-2020 வரும் அக்டோபர் 1, 2021 அன்று துவங்கி அடுத்த ஆறு மாத காலத்திற்கு கோலாகலமாக கொண்டாடப்படட இருக்கின்றது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாரான நிலையில், எக்ஸ்போவிற்கு செல்லும் பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகள் உலகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த டிக்கெட்டுகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு முறை செல்வதற்கான டிக்கெட் விலை 95 திர்ஹம் என்றும் ($ 26) தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கட்டுப்பாடற்ற நுழைவை வழங்கும் டிக்கெட்டிற்கான விலை, 195 திர்ஹம் என்றும் ($ 53), மற்றும் எக்ஸ்போ 2020 இன் ஆறு மாதங்களுக்கும் வரம்பற்ற நுழைவைப் பெறுவதற்கான டிக்கெட் விலை 495 திர்ஹம் ($ 135) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டுகள் எக்ஸ்போ தளத்தில் உள்ள அனைத்து பெவிலியன்கள், நிகழ்வுகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கான அணுகல், எக்ஸ்போவின் பொழுதுபோக்கு திட்டத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

துபாய் எக்ஸ்போவில் ஒவ்வொரு நாளும் 60 நேரடி நிகழ்வுகளுடன், உலகத் தரம் வாய்ந்த இசை, நடனம் மற்றும் கலை முதல் நுண்ணறிவு வாய்ந்த பேச்சுக்கள் மற்றும் வண்ணமயமான தேசிய தின கொண்டாட்டங்கள் என கோலாகலமாக நடைபெறவுள்ளது.

டிக்கெட் பெறுவது எப்படி..?

துபாய் எக்ஸ்போவிற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் expo2020dubai.com என்ற இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். உலகெங்கிலும் உள்ள ஆன்லைன் பயண முகவர்கள், டூர் ஆபரேட்டர்கள், ஹோட்டல் குழுக்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உட்பட 2,500 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் மறுவிற்பனையாளர்கள் மூலமாகவும் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் உலகின் எந்தவொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையை வைத்திருக்கும் மாணவர்களுக்கு எக்ஸ்போவிற்குள் செல்ல இலவசமாக அனுமதி வழங்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் எக்ஸ்போவிற்குள் நுழைய இலவச அனுமதி மற்றும் அவருடன் துணை வருபவருக்கு டிக்கெட்டில் 50 % தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் இலவசமாக நுழையலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்

எக்ஸ்போ 2020 துபாய்க்கு செல்லும் பார்வையாளர்கள் எக்ஸ்போ தளத்திற்குள் நுழைய தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரங்களை தற்போது வழங்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பார்வையாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது, மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் முக கவசங்களை அணிவது, சமூக விலகல் மற்றும் வழக்கமான கைகளை கழுவுதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் துபாய் சுகாதார ஆணையத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படும் எக்ஸ்போ 2020 அனைத்து பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம், எக்ஸ்போ 2020 அதன் பணியாளர்கள் அனைத்து அதிகாரப்பூர்வ பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் அவர்களின் பணியாளர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!