அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ர்: துபாயின் பார்க் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் இயங்கும் நேரங்களில் மாற்றம்..!! முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!

ஈத் விடுமுறை நாட்களில் துபாயில் இருக்கும் பொது பூங்காக்கள் செயல்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஈத் விடுமுறையின் போது துபாயில் இருக்கக்கூடிய பார்க் அல்லது துபாய் ஃபிரேமுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், துபாயில் உள்ள பொதுப் பூங்காக்கள் செயல்படும் நேரங்களை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். 

ஏப்ரல் 29 அன்று, துபாயின் பொது பூங்காக்கள் எனும் பப்ளிக் பார்க் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஈத் அல் ஃபித்ரின் போது பின்பற்றப்படும் நேரத்தை துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

துபாய் பப்ளிக் பார்க் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொது பூங்காக்களுக்கான நேரங்கள்:

பின்வரும் பப்ளிக் பார்க் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். அவை

  • முஷ்ரிஃப் பார்க்
  • சஃபா பார்க்
  • ஜபீல் பார்க்
  • அல் மம்சார் பார்க்

குடியிருப்பு பகுதியில் உள்ள பார்க், ஸ்கொயர் மற்றும் லேக்: காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.

முஷ்ரிஃப் நேஷனல் பார்க்கில் உள்ள மவுண்டன் பைக் டிராக்: காலை 5:45 முதல் மாலை 5:45 வரை திறந்திருக்கும்

பொழுதுபோக்கு இடங்கள்:

துபாய் பிரேம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்

குரானிக் பார்க்: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்

கிளாஸ் ஹவுஸ் மற்றும் கேவ் ஆஃப் மிராகிள்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்

சில்ட்ரென் சிட்டி: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும்

துபாய் சஃபாரி பார்க்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!