அமீரக செய்திகள்

அபுதாபியில் பேருந்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு…!! 11 பேர் காயம்..!!

அபுதாபி சாலையில் அல் அய்னை நோக்கி இருக்கும் ரமா பகுதியில் பேருந்து மற்றும் வாகனம் மோதிய விபத்தில் ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று அபுதாபி காவல்துறை உறுதி செய்துள்ளது.

அல் அய்னில் உள்ள போக்குவரத்துத் துறையின் துணை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் சைஃப் நயிஃப் அல் அமெரி கூறுகையில், வாகனங்களுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டுச்செல்லாமல் அதே நேரத்தில் சாலையில் முழுகவனமும் செலுத்தாமல் அதீத வேகத்துடன் சென்று திடீரென பாதை மாற்றி ஓட்டியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து செயல்பாட்டுத் துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. அங்கு உடனடியாக சென்ற காவல்துறை மற்றும் அபுதாபி சிவில் பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தவாம் மருத்துவமனை மற்றும் ஷக்பூத் மெடிக்கல் சிட்டிக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பயங்கரமான விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய இந்த திடீர் பாதை மாற்றம் குறித்து எச்சரிக்கும் வகையில், அல் அய்னில் உள்ள போக்குவரத்துத் துறையானது வாகன ஓட்டிகளை போக்குவரத்துச் சட்டத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வாகனம் ஓட்டும் போது முழுகவனமும் அதில் செலுத்துமாறும், ஓட்டிக்கொண்டிருக்கும் பாதையில் இருந்து மற்ற பாதைக்கு செல்ல போதுமான இடவசதி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், பாதையை மாற்றும் போது டிராஃபிக் லைட்ஸ் மற்றும் வாகனத்தின் கண்ணாடிகளில் போக்குவரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!