அமீரக சட்டங்கள்

UAE: நகை, பணம் உள்ளிட்ட மதிப்புள்ள பொருட்களுடன் வரும் பயணிகளுக்கு இது கட்டாயம்..!! எப்படி பதிவு செய்வது..??

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்லும் அல்லது வெளியேறும் சர்வதேச பயணிகள் 60,000 திர்ஹம்களுக்கு அதிகமான பணம், தனிப்பட்ட பொருட்கள், நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த கற்களை வைத்திருந்தால் அவற்றை சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று பிப்ரவரி 14ஆம் தேதி அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (Identity, Citizenship, Customs and Ports Security – ICP) அறிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள வரம்பைத் தாண்டிய தொகையையோ, பொருள்களையோ கொண்டு செல்லும் பயணிகள், புதிதாக தொடங்கப்பட்ட Afseh இணையதளத்தில் declare.customs.ae என்ற லிங்கையோ Apple மற்றும் Android மொபைல்களில் கிடைக்கும் ‘Afseh’ மொபைல் ஆப்ஸையோ பயன்படுத்தி அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ICP வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகள், தங்களிடம் உள்ள தனிப்பட்ட பொருட்களை, 60,000 திர்ஹம்களுக்கு மேல் பணமாகவோ, காசோலைகளாகவோ அல்லது விலைமதிப்பற்ற நகைகளாகவோ வைத்திருந்தால் மட்டுமே அறிவிக்க வேண்டும். ஒருவேளை, பயணி 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால், உடன் வரும் வயது வந்த குடும்ப உறுப்பினருக்குத் தொகை சேர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆன்லைன் முறையானது ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த எமிரேட்டில் இருந்து பயணம் செய்கிறீர்கள் அல்லது உள்நுழைகிறீர்கள் என்பதைப் பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அபுதாபி, ஷார்ஜா அல்லது ராஸ் அல் கைமாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்தால், Afseh இணையதளத்தின் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம். இல்லையெனில், துபாயில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைந்தால் அல்லது வெளியேறினால், துபாய் சுங்கத்தின் iDeclare மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Afseh தளத்தில் 60,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறை 1: முதலில் பயனர் https://declare.customs.ae/ என்ற லிங்க்கை க்ளிக் செய்து Afseh வலைத்தளத்திற்குள் செல்ல வேண்டும். பின்னர் பயணிகள் அவர்களது UAE பாஸ் மூலம் கணக்கை உருவாக்கி உள்நுழைய வேண்டும். பயனர்கள் UAE பாஸ் வழியாக உள்நுழைந்ததும், அவர்களின் UAE விசா தகவல், Emirates ID விவரங்கள், முழுப் பெயர் மற்றும் அவர்களின் நாடு ஆகியவை தானாகவே நிரப்பப்படும்.

அதன் பிறகு, பயனர்களிடம் கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும். பயனர்கள் அளிக்கவேண்டிய விவரங்கள் பின்வருமாறு,

(ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவராக இருந்தால்)

  • எமிரேட் (Emirate)
  • நகரம் (City)
  • பகுதி/மாவட்டம் (Area/ District)
  • தெருவின் பெயர் (Street name)
  • கட்டிடத்தின் பெயர்/எண், தளம், அபார்ட்மெண்ட் அல்லது வில்லா எண். (Block name/ no, flat, apartment or villa no.)
  • கைபேசி எண் (Mobile no)

வசிக்கும் நாட்டிற்குள் உள்ள முகவரி (நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவராக இல்லாவிட்டால்)

  • நாடு (Country)
  • நகரம் (City)
  • பகுதி/மாவட்டம் (Area/ District)
  • தெருவின் பெயர் (Street name)
  • கட்டிடத்தின் பெயர்/எண், தளம், அபார்ட்மெண்ட் அல்லது வில்லா எண். (Block name/ no, flat, apartment or villa no)
  • தொலைபேசி எண் (Mobile no)

வழிமுறை 2: வலைத்தளத்தில் கணக்கை உருவாக்கியவுடன், ‘Apply for a new declaration request’ என்ற சேவையை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்தபடியாக, பயணம் தொடர்பான பின்வரும் விவரங்களை உள்ளிட வேண்டும்.

  • பயண வகை – வருகை அல்லது புறப்பாடு (Travelling type – arrival or departure)
  • பயண தேதி (Travel date)
  • வருகை அல்லது புறப்படும் எமிரேட் (The Emirate of arrival or departure)
  • பயணிக்கும் முறை – கடல், நிலம் அல்லது வான் வழி (Port type – sea, land or air)
  • நீங்கள் எங்கிருந்து/எங்கிருந்து பயணிக்கிறீர்கள் (Where you are travelling from/to)
  • போக்குவரத்து வகை – சரக்கு அல்லது பயணிகள் (Transport type – cargo or passenger)
  • விமான நிறுவனத்தின் பெயர் மற்றும் டிக்கெட் எண் ( Name of the airline and ticket number)

பணம் அல்லது பொருட்களின் விவரம் மற்றும் தொகையை உள்ளிடவும்:

  • வெளிப்படுத்தும் வகையைத் (declaration type) தேர்ந்தெடுக்கவும் – நாணயங்கள், தனிப்பட்ட பொருட்கள், நகைகள் அல்லது விலைமதிப்புள்ள கற்கள். பணமாக இருந்தால், நாணய வகையைத் (currency type) தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எவ்வளவு பணம் என்பதை உள்ளிட வேண்டும்.
  • உங்கள் விண்ணப்பத்தைச் சேமித்து, ‘submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

வழிமுறை 3: அடுத்தகட்டமாக, பயணிகள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் ICP அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்படும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தில் SMS மற்றும் அறிவிப்பைப் (Notification) பெறுவீர்கள். மேலும், https://declare.customs.ae/public/myRequests என்ற லிங்க் மூலம் பயணிகள் அவர்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமில்லாமல், இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!